ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நாளை மோதல்

ஜெய்ப்பூர், ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோவை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேவேளையில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 … Read more

சிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி

டமாஸ்கஸ், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈராக், சிரியாவில் ஈரானிய ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. எனவே அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. எனவே அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிர் எஸ் சோர் நகரில் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவில் … Read more

நடுதெருவில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கிய பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் பச்சோரா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே சமீபகாலமாக மோதல்போக்கு நிலவி வந்துள்ளது. இவரும் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அதேகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணும் லட்சுமியின் மாமியாரும் நட்புரீதியில் பழகி வந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணின் தூண்டுதலின் பெயரிலேயே தனது மாமியார் தன்னுடன் சண்டையிட்டு வருவதாக லட்சுமி நினைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் 30 வயதான அப்பெண்ணும், லட்சுமியின் மாமியாரும் ஹோலி பண்டிகையன்று தங்கள் கிராமத்திற்கு … Read more

ஐ.பி.எல்: போட்டி ஒன்று.. சாதனைகள் பல படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐதராபாத், நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு ஐதராபாத் 277 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் … Read more

ஆயுதக் குழுவினர் இடைவிடாத தாக்குதல்.. ஹைதியில் பசி-பட்டினியால் வாடும் மக்கள்

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது. பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் … Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக வி.சி.க தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல்.திருமாவளவன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி: பெங்களூருவின் சாதனையை முறியடித்த ஐதராபாத்

ஐதராபாத், ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுவரும் 8வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால் களம் இறங்கினர். அகர்வால் 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து … Read more

பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சவுதி அரேபியா

ரியாத், அரேபிய தீபகற்பத்தின் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா, கடுமையான சமூக மற்றும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது. இருப்பினும், சமீப காலமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தலைமையில் பல மாறுதல்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மாற்றம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, அவர்கள் வாகனம் ஓட்டவும், கலப்பு-பாலின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் மற்றும் ஆண் பாதுகாவலர் இல்லாமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதி … Read more

ஐ.பி.எல்; சன்ரைசர்ஸ் சரவெடி பேட்டிங்…மும்பைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

ஐதராபாத், ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் … Read more

21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்

லே: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர். இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான இன்று முடித்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர், முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் … Read more