அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் – தேர்தல் கமிஷன் உத்தரவு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- விளம்பர … Read more

மான்டி கார்லோ டென்னிஸ்: போபண்ணா ஜோடி தோல்வி

மான்டி கார்லோ, மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட நம்பர் ஒன் ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, மேட் பவிச் (குரோஷியா)- மார்செலோ அரேவலோ (எல்வடார்) இணையை சந்தித்தது. இதில் போபண்ணா கூட்டணி 3-6, 6-7 (6-8) என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. … Read more

50 ரூபாய் மட்டுமே மிச்சம்.. மரணப் படுக்கையில் இருந்த தந்தையை ஏமாற்றி ரூ.5 கோடியை சுருட்டிய மகன்

லண்டன்: இங்கிலாந்தின் நோர்போக் மாவட்டம் அட்டில்பரோ பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் பிக்கெல் (வயது 58). முன்னாள் ராணுவ வீரர். இவரது தந்தை பீட்டர் பிக்கெல் கடந்த 2015ம் ஆண்டு முதுமை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நினைவாற்றல் குறைந்த நிலையில் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருந்துள்ளார். அவர் கிட்டத்தட்ட மரணப் படுக்கையில் இருந்ததால், அவரது வீடு மற்றும் நிதிகளை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை மகனான டேவிட் பிக்கெல் பெற்றிருக்கிறார். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி டேவிட் … Read more

திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவு: காதலியை கொன்று பீரோவில் அடைத்த வாலிபர்

புதுடெல்லி, டெல்லி துவாரகா அருகே உள்ள தாப்ரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ருக்சர் ராஜ்புத் (வயது 26) என்ற பெண், விபல் டெய்லர் என்பவருடன் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு ருக்சர் கொலை செய்யப்பட்டு பீரோவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காதலன் விபல் தனது மகளை கொன்றுவிட்டதாக ருக்சரின் தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி

புதுடெல்லி, 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப் 4-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை பந்தாடியது. பஞ்சாப் அணியில் வில்மர் ஜோர்டான் கில் (19-வது நிமிடம், 62-வது நிமிடம்) மடிக் தலால் (43-வது நிமிடம்), … Read more

காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. … Read more

"பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" – இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்

புதுடெல்லி, உலக பணக்காரர்களில் ஒருவரும், ‘எக்ஸ்’ வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசியதும், அப்போது அவரிடம் 2024-ல் தான் இந்தியா வருவதாக எலான் … Read more

என்னுடைய அணிக்காக இதே போல தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன் – ஆட்டநாயகன் நிதிஷ் ரெட்டி

முல்லன்பூர், ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் … Read more

சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவில் விருது

வாஷிங்டன், சந்திரயான்-3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்நிலையில், அமெரிக்காவில் கொலரோடாவில் வருடாந்திர விண்வெளி கருத்தரங்கம் நடந்தது. அதில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்புவாய்ந்த ஜான் எல்.’ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை ‘இஸ்ரோ’ சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார். தினத்தந்தி Related Tags : சந்திரயான்-3 குழு  அமெரிக்கா  விருது  … Read more

சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இதன் தலைவராக பாபா தர்செம் சிங் என்பவர் இருந்து வந்தார். கடந்த மாதம் 28-ந்தேதி பாபா தர்செம் சிங் குருத்வாராவுக்குள் அமர்ந்திருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் பாபா தர்செம் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே சீக்கிய மத குருவை சுட்டுக்கொலை செய்த … Read more