கொலை குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரண் அடையும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோர்ட்டில் சரண் அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கடந்த மார்ச் 8-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், ‘கொலை வழக்குகளில் தொடர்புடைய கோர்ட்டில் மட்டுமே சரண் அடைய வேண்டும். வேறொரு கோர்ட்டில் … Read more

பதிலடி கொடுக்குமா இந்தியா ? 3-வது ஆக்கி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடன் இன்று மோதல்

பெர்த், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 1-5, 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதனால் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஆட்டம் பெர்த்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. … Read more

கனடா: இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

ஒட்டாவா, கனடா நாட்டின் தெற்கு எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் மக்கள் சிலர் திரளாக கூடியிருந்தனர். அப்போது வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து தென்மேற்கு பிரிவின் ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதில், காயமடைந்து கிடந்த 3 ஆண்களை மீட்டனர். அவர்களில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்து விட்டனர். 51 … Read more

ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை, தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம். வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆர்.எம். வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். … Read more

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அணியில் கோலி இடம் பெற வேண்டும் – பிரையன் லாரா

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி 67 பந்தில் சதம் அடித்தார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு வீரரின் மந்தமான சதம் இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் அவரது பேட்டிங் அதிரடியாக இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் 20 ஓவர் உலகக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக … Read more

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

மாஸ்கோ, ரஷியாவின் சைபீரியா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஓர்க்ஸ் நகரில் உள்ள ஒரு அணை உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனவே அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் … Read more

எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டால் நடவடிக்கை – என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை

புதுடெல்லி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே, என்.சி.இ.ஆர்.டி.யின் போலி பாட புத்தகங்கள் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில், என்.சி.இ.ஆர்.டி. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் காணப்படும் பாடப்புத்தகங்களை சில சுயநல வெளியீட்டாளர்கள், என்.சி.இ.ஆர்.டி.யின் அனுமதியின்றி தங்கள் பெயரை போட்டு அச்சிட்டு வருகிறார்கள். அப்படி எங்கள் பாடப்புத்தகங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ அச்சிட்டு விற்பனை செய்பவர்கள், … Read more

கேன்டிடேட் செஸ் போட்டி: இந்திய வீரர் விதித் குஜராத்தி தோல்வி

டொரோன்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள். ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் … Read more

அமெரிக்காவில் நடுவானில் விமான என்ஜின் தகடு பிய்ந்து பறந்ததால் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து ஹூஸ்டனுக்கு போயிங் 737 விமானம் ஒன்று புறப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் என்ஜின் அருகே தடுப்பாக இருக்கும் தகடு பிய்ந்து காற்றில் பறந்தது. இதுகுறித்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அந்த விமானம் டென்வர் விமான நிலையத்துக்கே திரும்பி தரையிறங்கியது. அதில் இருந்த … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. இவர் முந்தைய தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து அமைச்சரை விடுவித்து கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி … Read more