ரிச்சா கோஸ் அதிரடி வீண்: பெங்களூருவுக்கு எதிராக டெல்லி அணி திரில் வெற்றி

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் விளையாடின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் … Read more

தென்கொரியாவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி – 5 பேர் மாயம்

சியோல், தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் 7 இந்தோனேசிய மீனவர்கள் உள்பட பலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு ராட்சத அலை எழும்பியது. இதனால் அந்த மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை மற்றொரு படகு மூலம் அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் … Read more

சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் – மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

புதுடெல்லி, ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கு மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் சமுத்ராயன் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில் ‘மத்ஸ்யா 6000’ என்ற ஆய்வு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமுத்ராயன் திட்டம் அடுத்த ஆண்டு (2025) இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என புவி அறிவியல் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் … Read more

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'

பாரீஸ், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியனான தென்கொரியாவின் காங் மின்-ஹியுக் – சியோ சியுங்-ஜே இணையை தோற்கடித்த இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி கூட்டணி, நேற்றிரவு நடந்த மகுடத்துக்கான இறுதி சுற்றில் யாங் போ ஹான்- லீ ஜே ஹூய் (சீனதைபே) ஜோடியுடன் மல்லுக்கட்டியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்ராஜ்- சிராக் ஜோடி 21-11, 21-17 … Read more

'மெஸ்ஸி' பெயரை கூறி ஹாமாஸ் படையினரிடம் இருந்து சாதூர்யமாக தப்பிய மூதாட்டி

இஸ்ரேல், இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொன்னதால் … Read more

பஞ்சாப்பில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது

ஜலந்தர், பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 22 கிலோ அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.9 கோடி மதிப்பிலான 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர். அதோடு போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் வாங்கிய ரூ.6 கோடி மதிப்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி

கொல்கத்தா, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – மோகன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மோகன் பகான் அணி சார்பில், ஜேசன் கம்மிங்ஸ் ஆட்டத்தின் 27-வது நிமிடத்திலும் லிஸ்டன் 36-வது நிமிடத்திலும் திமித்ரி 45+3-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணி … Read more

நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம்.. மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பிரதமர்

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பிறகு கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள … Read more

மீண்டும் எழும் டைம்டு அவுட் சர்ச்சை… மோதிக்கொண்ட வங்காளதேசம் – இலங்கை வீரர்கள்

சிலெட், இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பையில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக … Read more

கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிட்டவர்களின் வேட்புமனுக்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேபோல அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை சின்னத்தில் அதன் கூட்டணி கட்சியினர் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். இந்நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சின்னத்தில் தாக்கல் செய்த வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என அறிவிக்கவும், தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 கட்சிகளை சேர்ந்தவர்களின் வெற்றியை … Read more