பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு

இஸ்லாமாபாத், பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. 265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்தன. அக்கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் … Read more

"ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது.." – பிரதமர் மோடியை சாடிய அகிலேஷ் யாதவ்

லக்னோ, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தேர்தலில் அரசியலமைப்பை பாதுகாக்க விரும்புபவர்கள் ஒரு அணியாக உள்ளனர். மறுபுறம், அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டு வர விரும்புபவர்கள் உள்ளனர். அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் வகையில் இந்த தேர்தல் இருக்கும். இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றும் வகையிலும், தன் மானத்தை காப்பாற்றும் வகையிலும் இந்த தேர்தல் முடிவு இருக்கும். மத்திய பா.ஜனதா அரசுக்கு விடைகொடுக்க … Read more

'பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது'- ரோகித் சர்மா

தர்மசாலா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இதுபோன்று ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் நமது திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடக்க வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு அனுபவம் … Read more

அமெரிக்கா: விபத்தில் சிக்கிய தேசிய காவல் படை ஹெலிகாப்டர்; 2 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஸ்டார் கவுன்டி பகுதியில் லா குருல்லா என்ற சிறிய நகரத்தில் மெக்சிகோ எல்லையருகே தேசிய காவல் படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், தேசிய காவல் படை வீரர் மற்றும் எல்லை ரோந்து பணி ஏஜென்டுகள் 3 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, ரியோ கிராண்ட் ஆற்று பகுதியருகே அவர்களின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி டெக்சாஸ் … Read more

கேரளாவில் அதிர்ச்சி: நடைபாலத்தில் இருந்து கடலில் தூக்கி வீசப்பட்ட சுற்றுலா பயணிகள்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுற்றுலா தலமாகும். இங்கு கடல் அழகை ரசிக்க வசதியாக கேரள சுற்றுலா துறை சார்பில் சுமார் 100 மீட்டர் நீளத்தில் கடலுக்குள் மிதக்கும் நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் இந்த பாலத்தில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கடல் அழகை ரசித்த வண்ணம் இருந்தனர். அப்போது திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி

சென்னை, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி சார்பில் சஜாத் ஹுசைன் ஆட்டத்தின் இறுதியில் 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஐதராபாத் … Read more

தான்சானியா: கடல் ஆமை கறியை சாப்பிட்ட 8 குழந்தைகள் பலி

ஜன்ஜிபார், தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் பகுதிக்கு உட்பட்ட பெம்பா தீவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என சிலர் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதில், 8 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுபற்றி மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி ஹாஜி கூறும்போது, உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி … Read more

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: இன்று ரெயில் மறியல் அறிவிப்பு

சண்டிகார், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேநேரம் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ள அவர்கள், இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். … Read more

ஹர்மன் பீரித் கவுர் அபாரம்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை … Read more

கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை

லாகூர், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக்கடவுள் குறித்து, மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தால், அவமதித்தால் மற்றும் மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதரை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு … Read more