இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்தபோது விபரீதம்…!! பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காசியாபாத், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ரீல் வெளியிடும் மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக, வித வித ஆடைகளை அணிவது, ஒப்பனை செய்து கொள்வது என தங்களை தயார்படுத்தி கொண்டு வீடியோ எடுக்கின்றனர். வீடு, பூங்கா, பொது இடம் என எதனையும் விட்டு வைக்காமல் கிடைக்கிற இடங்களில் எல்லாம் வீடியோ எடுக்கின்றனர். எனினும், இதில் சில ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. காசியாபாத் நகரை சேர்ந்த சுஷ்மா என்ற பெண் … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் நெஹ்ராவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த டிரெண்ட் போல்ட்

ஜெய்ப்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல்.ல் அவரது விக்கெட் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல்.வரலாற்றில் அதிக … Read more

லண்டன்; சைக்கிளில் வீடு திரும்பிய இந்திய மாணவி விபத்தில் பலியான சோகம்

லண்டன், இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்.டி. படிப்பை படித்து வந்தவர் சேஸ்த கோச்சார் (வயது 33). அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவரான கோச்சார், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து விட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களிலும் படித்துள்ளார். இதனை தொடர்ந்து, லண்டனில் படித்து வந்த அவர், சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் மீது லாரி ஒன்று மோதியது. … Read more

எந்த நிபந்தனையும் இன்றி மீண்டும் பா.ஜ.க.வில் ஐக்கியமானார் ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வுமான ஜி.ஜனார்த்தன ரெட்டி தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். அவரது கட்சியையும் பா.ஜ.க.வுடன் இணைத்தார். பெங்களூருவில் பா.ஜ.க. தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனார்த்தன ரெட்டி, “இன்று எனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து, பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் … Read more

ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, நடப்பு ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

பிரேசிலில் கனமழை, நிலச்சரிவு; 23 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனீரோ, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தென்கிழக்கே கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளமும் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து, பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை சுற்றி வெள்ள நீர் தேங்கியதில் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆறுகளிலும் வெள்ளம் வழிந்தோடுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கடந்த … Read more

100 ஆண்டுகளுக்கு பின் முக்கிய சந்திர கிரகணம்.. இந்தியாவில் தென்படவில்லை

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின்போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டும் தெரியும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். … Read more

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மீண்டும் நாளை மோதல்

அபா, ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. அந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுடன் நாளை மோத உள்ளது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா … Read more

பிடிவாதம் வேண்டாம்.. இந்தியாவுடன் பேசுங்கள்.. மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் வலியுறுத்தல்

மாலே: சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, மாலத்தீவின் அதிபராக பதவியேற்றதையடுத்து, இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. அந்நாட்டு மந்திரிகள் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்தனர். மாலத்தீவின் விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என அதிபர் முய்சு கெடு விதித்தார். அதன்படி இந்திய ராணுவத்தின் முதல் குழுவினர் நாடு திரும்பினர். எஞ்சியுள்ள வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் மேலும் … Read more

தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்ப கெஜ்ரிவால் கைது; பினராயி விஜயன்

திருவனந்தபுரம், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்க துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது 3-வது முறையாக கேரளாவில் நேற்று பேரணி நடத்தியது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். அவர் பேரணியில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது, இந்தியா இதுவரை பார்த்திராத … Read more