தனிநபர்களை விட குறைந்த சதவீதத்தில் வரி செலுத்தும் கார்ப்ரேட் நிறுவனங்கள்!

இந்தியாவில் ஆயிரங்கள், லட்சங்கள் சம்பாதிக்கும் தனிநபர்கள் 25% வரி செலுத்துகின்றனர். ஆனால் கோடிகளில் வருமானம் ஈட்டும் கார்ப்ரேட் நிறுவனங்கள் எவ்வளவு வரி செலுத்துகின்றன தெரியுமா? இந்த ஆண்டு அதிக வரி செலுத்திய நிறுவனங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம். உயர் சொத்து மதிப்பு தனிநபர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடம்..! ரூ.11,536 கோடி டிசிஎஸ் தனது மொத்த வருவாயில் 6.8 சதவீதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்துகிறது. இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் … Read more

கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்களை அகற்றும் விப்ரோ..!

பெங்களூர்: பெங்களூர் நகரில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் மத்தியில் இந்தியாவின் சிலிக்கான் நகரமே ஸ்தம்பித்து போனது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பலவும் சிக்கல்களை சந்தித்தன. இதற்கிடையில் கடும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் பெங்களூரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே ஆகும். தண்ணீர் செல்லும் பாதைகள் அடைப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாமல், மக்கள் வசிக்கும் பகுதி, அலுவலகங்கள், சாலைகளில் பெருகெடுத்து ஓடியது. இதனால் அலுவலகம் செல்ல முடியாத ஊழியர்கள் டிராக்டர்களில் செல்லும் அவலம் ஏற்பட்டது. இலவசமாக விமானப்பயணம் செய்ய … Read more

‘இந்த’ வங்கி மூடப்படுகிறது.. உடனே பணத்தை எடுத்திடுங்க..!

இந்திய வங்கிகளில் வாராக் கடன் மற்றும் நிர்வாக முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகள் மத்தியில் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பில் சிக்கிய ஒரு வங்கி அடுத்த சில மணிநேரத்தில் மூடப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் மற்றும் ஆர்பிஐ அதன் வாடிக்கையாளர்களை விரைவில் பணத்தை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர். யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி! எந்த வங்கி தெரியுமா..? ரூபாய் கூட்டுறவு வங்கி புனே நகரத்தை … Read more

வட்டி குறைவு, சேவைக்கட்டணம் இல்லை, கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை.. இப்படி ஒரு கடனா?

தனிநபர் கடன் உள்பட பல்வேறு கடன்கள் வங்கியில் வாங்கும்போது அதிக வட்டி மற்றும் சேவை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் கிரெடிட் ஸ்கோர் கண்டிப்பாக சரிபார்க்கப்படும். ஆனால் எல்ஐசி பாலிசி மூலம் கடன் வாங்கினால் கிரெடி ஸ்கோர் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம். அந்த வகையில் எல்ஐசி பாலிசி நீங்கள் வைத்திருந்தால் அதன் மூலம் எப்படி கடன் வாங்குவது என்பது குறித்து தற்போது பார்ப்போம். … Read more

$150 மில்லியன் கடன் வழங்கும் உலக வங்கி.. இந்த மாநிலத்திற்கு ஜாக்பாட் தான்!

உலக வங்கி பல்வேறு நாடுகளுக்கும் சில நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கும் கடன் வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் உலக வங்கி கடன் வழங்கி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் உலகவங்கியின் இந்த கடன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகை மிரட்டும் ‘ரெசிஷன்’.. உலக வங்கி சொல்வது என்ன..? மக்களை … Read more

அதானி எடுத்த முக்கிய முடிவு.. அரண்டு போயுள்ள சிமெண்ட் நிறுவனங்கள்.. இது வேற லெவல் திட்டம்!

மும்பை: அதானி குழுமம் சில தினங்களுக்கு முன்பு தான் சிமெண்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாகவும், நாட்டின் முன்னணி லாபகரமான சிமெண்ட் தயாரிப்பாளராக உருவாக உள்ளதாகவும், அக்குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கூறினார். சமீபத்தில் தான் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் குழுமத்திடம் இருந்து அதானி வாங்கியது. இதன் மதிப்பு 6.5 பில்லியன் டாலராகும். இதன் மூலம் இந்தியாவின் முனனணி சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒருவராக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. … Read more

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தும் ஊழியர்கள் வர மறுத்து வரும் வேளையில், இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் எனத் தெரியாமல் விழித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 9000 டெக் ஊழியர்களை work from anywhere ஆப்ஷனில் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இது வொர்க் ப்ரம் ஹோம் விடவும் மிகப்பெரிய சலுகை என்பதால் இந்த அமெரிக்க நிறுவனம் டெக் நிறுவனங்கள் மத்தியில் … Read more

உங்க முதலீட்டை க்ளைம் செய்யவில்லையா.. அஞ்சலக திட்டங்களில் எப்படி தெரிந்து கொள்வது?

குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்து முதலீடு செய்த பணத்தை கடைசியில் க்ளைம் செய்ய முடியாமல் தவிக்கும் சில நிகழ்வுகளை பார்த்திருக்கலாம். ஒரு சிலர் தங்களது குடும்பத்திற்கு தெரியாமல் முதலீடு செய்து விட்டு, இறுதி வரையில் தெரியாமலேயே இறந்திருக்கலாம். சிலர் முதலீடு செய்தததையே மறந்திருக்கலாம். இதுபோன்ற ஒரு சில வழங்குகளை நாம் கேள்விப்பட்டிருக்க கூடும். அந்த வகையில் நாட்டின் மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்பு … Read more

யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா முறையின்படி யுபிஐ பண பரிமாற்றம் அதிகம் நடைபெறுகிறது என்பதும் ஏராளமான மக்கள் யுபிஐ முறையை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் ஒருசில கிரெடிட் கார்டுகளும் அனுமதிக்கப்பட்டன என்பதும் இதனால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மூன்று வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டுகள் மூலமும் யுபிஐ முறையில் … Read more

ஐஆர்சிடிசி-யின் ஷிவ் சாணி சாய் யாத்ரா பேக்கேஜ்.. கட்டணம் எவ்வளவு.. மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி, பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக நீண்டதூரம் செல்ல வேண்டிய ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செயல்படுத்தி வருகின்றது. கொரோனாவிற்கு பிறகு மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ள இந்த சுற்றுலா சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது. இதற்கிடையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஐஆர்சிடிசி இது குறித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் ஆன்மீக பயணிகளுக்கு முக்கிய பாரம்பரிய ஆன்மீக சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஒரு … Read more