டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது: அசம்பாவிதங்களை தடுக்க 2 அடுக்கு பாதுகாப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கேஜ்ரிவாலின் வீட்டை சுற்றிலும் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின்போது எம்எல்ஏ ராக்கி பிர்லா உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே கூடி கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை கைது செய்த போலீஸார் … Read more

மாஸ்கோ தாக்குதலில் பலி 60 ஆக அதிகரிப்பு – ஐஎஸ் பொறுப்பேற்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தத் தாக்குதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது … Read more

வேட்பாளர்கள், மாற்றுத் திறன் வாக்காளர்களுக்கு செயலிகள்: சுவிதா, சாக்‌ஷம் என்ற செயலிகளில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வேட்பாளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்காக ‘சுவிதா’ மற்றும் ‘சாக்‌ஷம்’ என்ற பெயரில் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சுவிதா’ செயலிவேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது, வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது, பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் … Read more

சென்னையில் 3 தொகுதிகளுக்கான 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே. நகர், ராயபுரம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக அபிஜித்அதிகாரி (94459 10931) நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக ஜி.ஏ. ஹரஹானந்த் (94459 10932) நியமிக்கப் … Read more

இஸ்ரோவின் ‘புஷ்பக்' விண்கல சோதனை வெற்றி

புதுடெல்லி: இஸ்ரோவின் ‘புஷ்பக்’ விண்கலம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆர்எல்வி (மறுபயன்பாடு விண்கலம்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடந்த 1981-ல் கொலம்பியா என்ற விண்கலத்தை (ஸ்பேஸ் ஷட்டில்) உருவாக்கியது. அடுத்தடுத்து பல்வேறு பெயர்களில் 5 விண்கலங்கள் தயாரிக்கப்பட்டன. அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள் காரணமாக 2011-ம் ஆண்டில் நாசாவின் 6 விண்கலங்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ 2010-ம் ஆண்டில் ஆர்எல்வி … Read more

பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.6.7 லட்சம் பணத்துடன் சிக்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

சென்னை: வருமானவரித் துறையினர் கொண்டு சென்ற 6.7 லட்சம் ரூபாயைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தனி நபர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதை பறிமுதல் செய்வார்கள். வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் போலீஸாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனசோதனையில் … Read more

உ.பி. மதரஸா மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மதரஸா கல்விச் சட்டம் 2004-ன் படி அந்த மாநிலத்தில் செயல்படும் மதரஸாக்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை உத்தர பிரதேசம் முழுவதும் செயல்படும் மதரஸாக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் … Read more

அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்திரா நூயி வேண்டுகோள்

நியூயார்க்: பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் இந்திரா நூயி (68). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வர்த்தக உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். அவர் தற்போது 10 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திரா நூயி பேசியிருப்பதாவது: இந்த வீடியோவை வெளியிட காரணம், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சில பிரச்சினைகளில் சிக்குவது தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கிறேன். ஏற்கெனவே … Read more

பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் அமைச்சர் ஆனார்

சென்னை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி நேற்று மாலை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை அவர் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் … Read more

வருமான வரி விவகாரம் டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை வருமான வரித் துறை அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்வதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 20-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பைஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திர குமார் கவுரவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. காங்கிரஸ் கட்சி … Read more