‘தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை’ – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து … Read more

தமிழகத்தில் 1,400+ வேட்புமனு தாக்கல் @ மக்களவைத் தேர்தல் 2024

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு போட்டியிடும் நோக்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தனித்து போட்டியிடும் சுயேச்சைகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்தின் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மனு தாக்கல் மந்தமாக இருந்தது. சில சுயேச்சை … Read more

லாலுவின் அடுத்த வாரிசு… யார் இந்த ரோகிணி ஆச்சார்யா? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா மக்களவைத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். லாலு பிரசாத் யாதவின் வாரிசுகள் தேஜஸ்வி யாதவ் உட்பட 3 பேர் ஏற்கெனவே அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா பிஹார் மாநிலத்தில் உள்ள சரன் தொகுதியில் போட்டியிடுகிறார். தந்தையின் அரசியல் செல்வாக்கு இவருக்கு … Read more

“நான் உங்கள் சித்தி வந்திருக்கிறேன்…” – மதுரையில் நடிகை ராதிகா பிரச்சாரம்

மதுரை: “நான் உங்கள் சித்தி வந்திருக்கிறேன்” என்று கூறி மதுரையில் நடிகை ராதிகா பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா, விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் கணவர் நடிகர் சரத்குமாருடன் பிரச்சாரம் செய்தார். அப்போது ராதிகா பேசியதாவது: “பாஜக வேட்பாளராக போட்டியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டெல்லியில் இருப்பவர்களுக்கு ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் ஓட்டுப்போட்டால் தான் டெல்லியில் … Read more

“தேர்தல் பத்திர விவகாரத்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு” – நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு

பெங்களூரு: தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு பரகலா பிரபாகர் அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெறும். தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக … Read more

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி வழங்க கோரிக்கை

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு … Read more

அமலாக்கத் துறைக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் – கேஜ்ரிவாலுக்கு சிக்கல் நீடிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கோரிக்கைகளை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. கேஜ்ரிவால் தனது மனுவில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை அமலாக்கத் துறையின் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். … Read more

“போதைப்பொருள் கடத்தவே திமுகவில் அயலக அணி!” – இபிஎஸ் @ குமரி பிரச்சாரக் கூட்டம்

நாகர்கோவில்: “போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது. இந்த அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்” என்று நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் … Read more

‘‘சட்டப்பிரிவு 370 ரத்து பலன்கள் என்னென்ன?” – அடுக்கிய காஷ்மீர் சமூக ஆர்வலர் தஸ்லீமா அக்தர்

புதுடெல்லி: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் நிறைய முன்னேற்றங்களைப் பார்க்க முடிவதாக அம்மாநில சமூக ஆர்வலர் தஸ்லீமா அக்தர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா-வின் 55வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானின் சதி குறித்து அம்பலப்படுத்தும் வகையில் பேசிய தஸ்லீமா அக்தர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது: “பாகிஸ்தானால் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்க … Read more

மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி (அ) கேஸ் சிலிண்டர் சின்னம்!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய விதிமுறைகள் 29 (a)-ன் படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 6 ஆண்டுகளாக ஒரு கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்தல்களில் போட்டியிடாவிட்டால், அக்கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. மதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த 1996-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. அந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் … Read more