திருவனந்தபுரம் காங். வேட்பாளர் சசி தரூருக்கு மத்திய அமைச்சர் அவதூறு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரப்பியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சசி தரூரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். … Read more

‘அமலாக்கத் துறையும் எங்கள் கிளையன்ட்’ – ஐபோன் கிரேக்கிங் நுட்பம் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: ஐபோன் கிரேக்கிங் அக்சஸ் கொண்டுள்ள டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்தின் கிளையண்ட் பட்டியலில் அமலாக்கத் துறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் அந்நிறுவனம் ‘நெக்ஸ்டெக்னோ ஜென்’ என அறியப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் செலிபிரைட் டெக் நிறுவனத்துக்கு என பிரத்யேக பிரிவை தனியாக கொண்டுள்ளது அந்நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை கிரேக் செய்யும் நுட்பத்தில் இந்நிறுவனம் உலக அளவில் ‘செலிபிரைட்’ பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. மதுபான … Read more

“தமிழகத்தில் நான் செல்லும் இடமெல்லாம் பாஜக அலை!” – பிரதமர் மோடி பிரச்சாரம் @ கோவை

கோவை: “திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் கோடிக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், அந்தத் திட்டத்தில், திமுகவினர் மட்டும் பயன் அடையும் வகையில் அத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இந்த கோவைப் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்க தண்ணீர் கிடைக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்” என்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரப் … Read more

“இரு கொள்கைகள் இடையிலான யுத்தம் இது!” – ராகுல் காந்தி @ மக்களவைத் தேர்தல்

புதுடெல்லி: “எதிர்வரும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார், மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து வருவது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் … Read more

மதுரை | மருத்துவர் வீட்டில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை

மதுரை: மதுரையில் மருத்துவர் ஒருவர் வீட்டில் இரவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகர் கேகே நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் மோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 11.50 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஐந்தரை மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை … Read more

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும்” – சித்தராமையா

பெங்களூரு: “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “மத்தியில் மீண்டும் … Read more

“கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது” – பிரதமர் மோடி விமர்சனம் @ வேலூர்

வேலூர்: “கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.” என்று வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று (செவ்வாய்) சென்னையில் நடந்த வாகனப் பேரணியில் பங்கேற்றார். இன்று … Read more

செருப்பு மாலையுடன் பிரச்சாரம்; பிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியல் பின்னணி – அலிகார் தொகுதி சுவாரஸ்யங்கள்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் அலிகர் தொகுதி தேர்தல் கள நிலவரம் பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டு கவனம் ஈர்த்துள்ளது. ஒருபுறம் செருப்பு மாலை அணிந்து ஒரு வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்றால் மறுபுறம் பிரதான கட்சிகளில் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. பூட்டுக்கும், கல்வி மற்றும் மதக்கலவரங்களுக்கும் பெயர்போன நகரம் அலிகர். இங்கு இந்துக்களும், முஸ்லிம்களும் சரிபாதியாக வாழ்கின்றனர். கடந்த 1991 முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கும் அலிகரில் 2004, 2009 இல் காங்கிரஸ் வேட்பாளரான சவுத்ரி விஜயேந்தர்சிங் … Read more

‘ஸ்டார் தொகுதி’ சிவகங்கை கள நிலவரம் என்ன? – ஒரு பார்வை

வீரம் செறிந்த சீமை என்று அழைக்கப்படும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் … Read more

இஸ்ரேலின் உண்மை நண்பன் இந்தியா: ஹமாஸ் தாக்குதலில் உயிர் தப்பிய இஸ்ரேலியர் கருத்து

புதுடெல்லி: தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய இஸ்ரேலியர் தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் இந்திய மக்களுக்கும், ஊடகத்துக்கும் முக்கியமாக பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காசாவில் இருந்து போர் தொடுத்தது. இதில் 1,100க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13, 000 குழந்தைகள் உட்பட 33,000 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இதனிடையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய … Read more