நவராத்திரி நாளில் வறுத்த மீன் சாப்பிடலாமா? – விமர்சனத்துக்கு உள்ளான தேஜஸ்வி யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்துக்காக, ஹெலிகாப்டரில் பறந்து கொண் டிருக்கும்போது வறுத்த மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் மீன் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் ராம நவமியையொட்டி கொண்டாடப்படும் நவராத்திரி நாளில் மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவை, பாஜக மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிஹாரில் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் … Read more

“உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் முயற்சி… அது நடக்காது!” – பழனிசாமி ஆவேசம் @ ஆரணி

ஆரணி: “கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? கருணாநிதி முதல்வராக இருந்தார், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அடுத்தது, உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அது நடக்காது, அது வேற விஷயம். ஏன் திமுகவில் வேறு ஆளே இல்லையா? திமுகவில் வேறு ஆட்களே கிடையாது. அனைத்து கட்சிகளும் கட்சிகளைப் போல இயங்குகின்றன. ஆனால், திமுக கார்ப்பரேட் கம்பெனி போல இயங்குகிறது” என்று ஆரணியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். திருவண்ணாமலை சேவூரில், ஆரணி … Read more

நாட்டில் பலவீனமான அரசுகள் இருந்தபோதெல்லாம் பயங்கரவாதம் பரவியது: பிரதமர் மோடி பேச்சு

ரிஷிகேஷ்: நாட்டில் பலவீனமான, நிலையற்ற அரசுகள் இருந்தபோதெல்லாம், எதிரிகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட்டின் ரிஷிகேஷ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டில் தற்போது வலிமையான அரசு உள்ளது. இதன் காரணமாக நமது ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்குள்ளேயே புகுந்து கொல்கிறார்கள். ஆனால், எப்போதெல்லாம் பலவீனமான அரசுகள் இருந்தனவோ அப்போதெல்லாம் அதனை நமது நாட்டின் எதிரிகள் தங்களுக்கு சாதகமாகப் … Read more

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.11: ராமதாஸ் எச்சரிக்கை முதல் விஜய் கட்டிய கோயில் வரை!

வன்னியர் இட ஒதுக்கீடு – ராமதாஸ் எச்சரிக்கை: “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அமித் … Read more

‘நாங்கள் சர்வாதிகாரிகளா?’ – காங்கிரஸுக்கு ராஜ்நாத் சிங் பதில்

புதுடெல்லி: பாஜகவினரை சர்வாதிகாரிகள் என காங்கிரஸ் அழைப்பதற்கு பதில் கூறும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: “அண்டை நாடான பாகிஸ்தானால் தீவிரவாதத்தை தடுக்க முடியவில்லை என்று நினைத்தால், அவர்களுக்கு இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. தீவிரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை சீர்குலைக்க முயன்றால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும்” என்று … Read more

“திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு” – வானதி சீனிவாசன் விமர்சனம்

நாமக்கல்: பாரதிய ஜனதா கட்சியில் உழைக்கின்ற நபர்கள் எளிதாக முன்னுக்கு வர முடியும். ஆனால் திமுகவில் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி நாமக்கல் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் திருச்செங்கோடு அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “பிரதமர் வேட்பாளர் … Read more

“70 கோடி மக்கள் வைத்துள்ள அதே அளவு பணம் 22 பெரும் பணக்காரர்கள் வசம்” – ராகுல் காந்தி

பிகானிர்: நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம் 22 பெரும் பணக்கார்களிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பிகானிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால், நம்நாட்டு ஊடகங்களைப் பார்க்கும்போது, ​​அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணம்தான் மிகப் பெரிய செய்தியாக இருப்பதைப் பார்க்கலாம். … Read more

“திமுகவை பழிவாங்கிட பாமகவை அதிமுகவினர் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” – அன்புமணி @ சேலம்

சேலம்: “அதிமுக தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை, பிரதமர் வேட்பாளர் கிடையாது, தேர்தலில் வெற்றி பெற்றால் பழனிசாமி முதல்வராக போவதில்லை. எனவே, எதிரியாக இருக்கும் திமுகவைப் பழிவாங்கிட, அதிமுகவினர் பாமகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் என்.அண்ணாதுரையை ஆதரித்து, சேலம் மெய்யனூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “வரும் 2026-ல் நடைபெறவுள்ள தமிழக … Read more

“சிஏஏ விவகாரத்தில் மவுனம் காக்கும் காங்கிரஸிடம் இருப்பது பாஜக மனநிலை!” – பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கும் மவுனத்துக்குக் காரணம், அதற்கு இருக்கும் பாஜக மனநிலைதான்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அட்டிங்கல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பினராயி விஜயன், … Read more

“திட்டிக்கொள்ளும் அரசியலுக்கு பதிலாக திருத்திக்கொள்ளும் அரசியல்…” –  கமல்ஹாசன் யோசனை @ மதுரை

மதுரை: “நவீன அரசியல் திட்டிக்கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது; திருத்திக்கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும்” என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார். மதுரை ஆனையூரில் வியாழக்கிழமை மநீம தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்கின்றனர். இங்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் கூட அனுமதி பெற வேண்டியுள்ளது. அரசியல் … Read more