அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தற்போது அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும், புதிது, புதிதாக நிர்வாகிகளை நியமித்தும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். எனவே அவர் … Read more

கூகுள் மேப்பை நம்பி வர வேண்டாம்: சாலையோரம் பேனர் வைத்த குடகு கிராம மக்கள்

பெங்களூரு: மேப் விவரம் தவறானது என்று கர்நாடகாவின் குடகு பகுதி மக்கள் சாலையோரம் பேனர் வைத்துள்ளனர். கர்நாடகாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது. இது, ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. குடகு மலைப் பகுதியின் மடிகேரி, விராஜ்பேட்டையில் ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்’ ஓய்வு விடுதிகள் செயல்படுகின்றன. இயற்கை எழிலை ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடகு மலைப் பகுதியில் அமைந்துள்ள ‘கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்களுக்கு’ வருகின்றனர். புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் … Read more

பண பட்டுவாடா புகார் அளிக்க வருமானவரி துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகம் நடப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக வருமான வரித் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் விநியோகம் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வருமான வரித் துறை சார்பில் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியிலாவது வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகம் நடந்தால், அதுபற்றிய தகவல்கள், புகார்களை பொதுமக்கள், அரசியல் … Read more

ராணுவப் படையில் 6ஜி, ஏஐ தொழில்நுட்ப பிரிவு தொடக்கம்

புதுடெல்லி: பிற துறைகளைப் போன்று போர்க்களத்திலும் தொழில்நுட்ப மாற்றம் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி யுத்த களத்தில் எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், எதிரிப்படையை துல்லியமாகத் தாக்கவும் பெரிதும் உதவுகிறது. இது குறித்து ராணுவப் தொழில்நுட்ப பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் கம்பி மற்றும்கம்பியில்லா தொழில்நுட்ப முறைகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல ‘ஸ்டீக்’ (STEAG) எனப்படும் சமிக்ஞை தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு … Read more

பணவீக்கம் அதிகரிப்பதால் 22% வட்டி விகிதம் தொடரும்: பாகிஸ்தான் மத்திய வங்கி அறிவிப்பு

புதுடெல்லி: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 22 சதவீதமாகவே தொடரும் என அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பணவீக்க விகிதம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 32.89% என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, பாகிஸ்தான் மத்தியவங்கி ஆறாவது முறையாக வட்டிவிகிதத்தை 22% என்ற அளவிலேயே நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் 2025-ம் ஆண்டு செப்டம்பருக்குள் பணவீக்க விகிதம் 5-7%-ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் புதிய அரசு … Read more

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு: மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு … Read more

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ராஜினாமா: தேர்தலில் போட்டியிடுகிறார்

ஹைதராபாத்: ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 செப்டம்பர் 8-ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றார். கடந்த 2021-ல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன், … Read more

நெல்லை தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக களம் காணும் காங்கிரஸ்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் நேரடியாக களம் காணுகிறது. திருநெல்வேலி தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2019-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் 5 முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 1952, 1957 தேர்தல்களில் பெ.தி.தாணுப்பிள்ளையும், 1962-ல் முத்தையாவும், 2004-ல் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தனும், 2009-ல் எஸ்.எஸ். ராமசுப்புவும் வெற்றி பெற்றுள்ளனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் … Read more

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் எப்போதும் இல்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியார் ஊடகத்துக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், பிற கட்சிகளுடனான கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி முன்னிறுத்தப்படலாம் என கூறப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. இதுகுறித்து நிதின் கட்கரி கூறியதாவது: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் ஒருபோதும் இருந்ததில்லை. இப்போது உள்ள பதவியே எனக்கு … Read more

“தேர்தல் ஆணையம் மூலம் குறைவான கால அவகாசம் கொடுத்து நெருக்கடி” – கே.பாலகிருஷ்ணன் காட்டம்

மதுரை: “தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமருக்கு தெரியும். அது தெரிந்துதான் தேர்தல் ஆணையம் மூலம் குறைந்த கால அவகாசம் கொடுத்து நெருக்கடியை கொடுத்துள்ளனர். எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எம்எல்ஏவாக தொடரும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின், … Read more