வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால் ‘பீர்’ விற்பனை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 28-ந்தேதியே முடிந்து விட்டது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கோடை வெயில் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் தற்போது ‘பீர்’ விற்பனை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 5,380 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளை ஒட்டி 3,240 பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் … Read more

விவாகரத்து தராததால் இளம்பெண்ணை கொன்று உடலை போர்வையில் கட்டி ஏரியில் வீச்சு- கணவர் உள்பட 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அடுத்த கோர்லகுண்டாவை சேர்ந்தவர் பத்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேணுகோபாலுக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்தே வேணுகோ பாலுக்கும், பத்மாவுக்கும் தகராறு இருந்து வந்தது. மேலும் வேணு கோபாலின் பெற்றோர் பாண்டுரங்கச்சாரி மற்றும் ராணி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பத்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் பத்மாவிடம் இருந்து விவாகரத்து கோரி வேணுகோபால் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் பத்மா தனது கணவரை விவாகரத்து … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கையில் வரிகள் உயர்வு- அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது. … Read more

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி மீது வழக்குப்பதிவு

பீகார்: டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.  இதற்கு நியூ குளோபல் நிறுவனம் சரியாக சந்தைப்படுத்தாதே காரணம் என டிஎஸ் எண்டர்பிரைசஸ் குற்றம்சாட்டியது. இதனால் நியூ குளோபல் நிறுவனம் … Read more

நாடு முழுவதும் புதிதாக 2,745 பேருக்கு தொற்று- மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் இல்லாத அளவில் அதிகரித்த கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 29-ந் தேதி பாதிப்பு 2,828 ஆக இருந்தது. மறுநாள் 2,706 ஆகவும், நேற்று 2,338 ஆகவும் குறைந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 726 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக … Read more

பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் தொடரை 13 முறை வென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், உலகின் ‘நம்பர் 1’ வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் மோதினர்.  டென்னிஸ் உலகின் இரு பெரும் நட்சத்திரங்கள் மோதுவதால் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் … Read more

தேயிலை தோட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில், மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு வந்துள்ளனர். அந்த தம்பதி இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க … Read more

வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு

சென்னை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை 135 ரூபாய் குறைந்துள்ளது. 2508 ரூபாய்க்கு விற்று வந்த வணிக கேஸ் சிலிண்டர் 2373 ரூபாய்க்கு விற்பனையாகி … Read more

காங்கிரசுக்காக இனிமேல் பணியாற்ற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

பாட்னா : பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் முழுவதும் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. நான் நல்ல யோசனைகளை சொன்னபோதிலும், தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள காங்கிரஸ் முன்வரவில்லை. அது காங்கிரசுக்கு கெடுதலாக அமையும். எனது 10 ஆண்டு … Read more

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி சேவை தொடக்கம்

கொழும்பு : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். இலங்கை விமானங்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில், இலவச மிதிவண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதன் … Read more