மக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்- கேரள முதல்வர்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன், புகையிலை பயன்பாடு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், கொரோனா தொற்று நோயால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, புகையிலையைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், புகையிலையால் கொடிய பக்கவிளைவுகளும் ஏற்படுவதால் மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எனவே … Read more

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த … Read more

பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- மனுதாக்கல் இன்றுடன் நிறைவு

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 57 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. நாளை (1-ந்தேதி) மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 3-ந்தேதி மாலை 3 மணி வரை … Read more

500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம்- புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படுகிறது

புது டெல்லி: இந்தியாவை பொறுத்த வரை ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது. இப்படி சமீபகாலமாக 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும் வெளி வந்து அதிகாரிகளை அதிர வைத்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல இந்த நிதி ஆண்டில் இதுவரை 2 லட்சத்து … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி கோட்டையை நோக்கி பாரதிய ஜனதா பேரணி- அண்ணாமலை தலைமையில் திரண்டனர்

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்காதது மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டு அங்கிருந்து பேரணியாக கோட்டை நோக்கி செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 11 கட்சி மாவட்டங்களை சேர்ந்த கட்சி … Read more

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் இந்த ஏலத்தை நடத்தியது. முதல் கட்டத்தில் 1805 பொருட்களில் 240 பொருட்களும் 2-வது கட்ட மாக 2772 பொருட்களில் 612 பொருட்களும் ஏலம் விடப்பட்டது. 3-வது கட்டமாக 1348 பொருட்கள் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 391 பொருட்கள் ஏலம் போனது. இந்த … Read more

சரிவுப்பாதையில் சீன மக்கள் தொகை: குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்

பீஜிங் : மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை குறைந்தது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பிரிவின் கணக்குப்படி, சீன … Read more

தமிழ்நாட்டில் சிகரெட், பீடியால் 8 ஆயிரம் டன் கழிவுகள்- ஆய்வில் தகவல்

சென்னை: உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இதையொட்டி நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேரி அன்னே அறக்கட்டளை மற்றும் தி யூனியன் அமைப்பு நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 8 ஆயிரம் டன் புகையிலை கழிவுகள் வெளியாவது தெரிய வந்துள்ளது. இதில் சிகரெட் கழிவுகள் 4,039 டன், பீடி கழிவுகள் 606 டன் ஆகும். மற்றவை புகையில்லா புகையிலை கழிவுகளாகும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் … Read more

ஒரு சமூகத்தினர் மட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பது ஏன்?: சித்தராமையா விமர்சனம்

பெங்களூரு: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்று நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு அந்த அமைப்பினரோ அல்லது பா.ஜனதாவினரோ பதில் கூறவில்லை. எனது கேள்விக்கு பதிலளிக்க முடியாத பா.ஜனதாவினர் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி பேசுகிறார்கள். எனது சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத ஆர்.எஸ்.எஸ். ஒரு பலவீனமான அமைப்பா?. அந்த அமைப்பு … Read more

ஈரானிடம் உச்ச வரம்பை விட அதிக யுரேனியம்- சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை

நியூயார்க்: கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் ஒப்பந்தத்தின்படி ஈரான் 300 கிலோ யுன்ரேனியத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஈரான் 3809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை குற்றம்சாட்டியுள்ளது. இது ஈரானுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட 13 மடங்கு அதிக யுரேனியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தி பல … Read more