ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவு- ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

பிரசல்ஸ்: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 97-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷியாவை நம்பியே உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தேவையான 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருட்களை … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் தோல்வி

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் … Read more

ஆர்யன் கான் வழக்கு: சர்ச்சை அதிகாரி வான்கடே சென்னைக்கு மாற்றம்

புதுடெல்லி : மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அப்போது, மும்பை மண்டல என்.சி.பி., இயக்குனராக இருந்த சமீர் வான்கடே, இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து … Read more

கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம்: கனடா அதிரடி அறிவிப்பு

ஒட்டாவா : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் … Read more

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 57 பேர் காயம்

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்கு சொந்தமான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் காயமடைந்தனர்.  கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் … Read more

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை- விற்பனையாளர்கள் சங்கம் முடிவு

புதுடெல்லி: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,  இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 2017 ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, … Read more

லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க மாட்டோம்- ஜோ பைடன் தகவல்

31.5.2022 04.10: உக்ரைனின் மெலிடோபோல் நகரில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததல் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அந்த நகரம் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய படைகளை எதிர்ப்போர் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் எனுறு ரஷிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.  மெலிடோபோல் நகரை நிர்வாகம் செய்ய ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரி தங்கியிருந்த கட்டிடத்திற்கு அருகே இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக மேயர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார். 02.50: ரஷியா, உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு … Read more

ஆறு குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்- அதிர்ச்சியில் உறைந்து போன கிராம மக்கள்

ராய்காட் : மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ளது காரவலி கிராமம்.   இந்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்து வீசி எறிந்துள்ளார்.  அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.   நீரில் மூழ்கியவர்களில் … Read more

டெல்லியில் கொட்டி தீர்த்தது கனமழை- மரங்கள் சாய்ந்தன, மின் கம்பங்கள் சேதம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது  பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இடியுடன் கூடிய மழையால் டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார் மீது மரம் விழுந்ததில், அதில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் … Read more

காபோன் நாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

லிப்ரெவில்லி:  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் வரும் 7 ந் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  முதல் கட்டமாக டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் கபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையத்திற்கு சென்று இறங்கிய வெங்கையா நாயுடுவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா … Read more