டெல்லியில் இன்று கட்டிடத்தில் தீ விபத்து- 5 பேர் படுகாயம்

புதுடெல்லி: டெல்லி துவாராகா பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் 52 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கட்டிடத்தின் மீட்டர் பெட்டியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் 24 பெண்கள் உள்பட 52 பேரை மீட்டனர். இதில் 5 பேருக்கு தீக்காயம் … Read more

ஐபிஎல் கோப்பையுடன் வெற்றி ஊர்வலம் சென்ற குஜராத் அணி

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியினர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வெற்றிக் கோப்பையை ஊர்வலமாக சென்றனர். கோப்பையுடன் சென்ற வண்டியில் குஜராத் அணி … Read more

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கைது – அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இந்த … Read more

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி – தஞ்சையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர்: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.  … Read more

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – சிவில் சர்வீஸ் தேர்வில் 685 பேர் வெற்றி

புதுடெல்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று தகுதி செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த … Read more

அரசியல் நாகரீகத்தை மாற்றிக் காட்டியவர் பிரதமர் மோடி – ஜே.பி.நட்டா புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து, பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியல் நாகரீகத்தை மாற்றிக் காட்டியுள்ளார். சேவை, நல்லாட்சி, ஏழை நலன் இதுவே மோடி அரசின் செயல்பாடு. … Read more

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.  ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது. முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 30ம்தேதிக்கு … Read more

விவசாய சங்கத் தலைவர் மீது மை வீச்சு – பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்துள்ள விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். கர்நாடக விவசாய சங்கத் தலைவர் ஒருவர் பணம் கோரியதாக வெளியான ரகசிய வீடியோ குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை அவர் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கும்போது திடீரென அங்கு வந்த சிலர் ராகேஷ் திகாய்த் மீது மை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ராகேஷ் திகாய்த் ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு களேபரம் … Read more

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை பிரதமர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அரசு வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். … Read more

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1000-க்கு செய்யப்படும் முழு உடல் பரிசோதனைகள்

சென்னை: பல்வேறு நோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதற்காக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகள் அடிப்படை சோதனைகள், அதிநவீன சோதனைகள் மேற்கொள்வதை வைத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்து கொள்கிறார்கள். சாதாரண மக்கள் பொருளாதார பிரச்சினையால் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் நோய்கள் முற்றிய நிலையில் ஆபத்தை சந்திக்கிறார்கள். இதை தவிர்க்க ஏழைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் முழு உடல் … Read more