மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள தாடி பாலாஜி மனைவி நித்யா..!

சென்னை மாதவரம் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். … Read more

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! 87.33% மாணவர்கள் தேர்ச்சி..!

பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் … Read more

ரூ.3 லட்சம் வழங்க பேடிஎம்-க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

மோசடி கும்பலால் திருடப்பட்ட பணத்தை திருப்பி வழங்க பேடிஎம்-க்கு உத்தரவிடும்படி ஆர்பிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மருத்துவ மேற்படிப்பு மாணவி பவித்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது பணம் காணாமல் போனதால் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என வங்கி தரப்பு வாதம்.அதே போல் வாடிக்கையாளருக்கு தெரியாமல், அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமல் பண பரிவர்த்தனை நடைபெறாது என பேடிஎம் தரப்பு வாதிட்டது. இதை கேட்ட நீதிபதிகள் வங்கி நிர்வாகமும், பேடிஎம் … Read more

கர்நாடகாவில் நாளை வாக்கு எண்ணிக்கை : முடிவுகளை உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு..!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சுயேச்சையாக 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியில் … Read more

அவசர நிலை முடிவுக்கு வந்தது: மெக்சிகோ அரசு அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் கடந்த 2019-ல் சீனாவில் கண்டறியப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி மெக்சிகோ நாட்டில் கொரோனா அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் உள்ள 95 சதவீதம் மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் … Read more

ஓடும் ரயிலில் ஏறும் போது தடுமாறிய நபரை சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் காவலர்..!

டாடாநகர் ரெயில் நிலையத்தில் சில பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற முயல்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் தவறி விழுந்தார். இந்த நிலையில் பிளாட்பாரத்தில் இருந்த பெண் காவலர் சரியான நேரத்தில் ஓடி வந்து அந்த நபரை காப்பாற்றினார். பின்னர், அந்த நபர் அவரது பொருட்களுடன் அதிகாரியின் உதவியுடன் ரெயிலில் ஏறி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. Source link

இன்று முதல் +2 வகுப்பு மதிப்பெண் பட்டியல் பள்ளிகளில் வினியோகம்..!!

+2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது. இந்த நிலையில் இது குறித்து பள்ளி தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் … Read more

சர்ச்சையில் சிக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று 37 நாடுகளில் வெளியாகிறது..!!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கேரளா ஸ்டோரி”.கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த 32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது. இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க … Read more

கேரளாவில் மருத்துவர்கள் போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிப்பு..!!

கொல்லத்தை சேர்ந்தவர் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தனது குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் துறையின் அவசர எண்ணை தொடர்புகொண்டு அவர் உதவி கோரினார். அதன் அடிப்படையில், காவல் துறையினர் அங்கு சென்றபோது சந்தீப்பின் காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கொட்டாரக்கராவில் உள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர் சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென சிகிச்சை அறையில் … Read more

மோக்கா புயல் உருவாகியுள்ள நிலையில் வெளியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று (மே 11) காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு ‘மோக்கா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13.05.2023 அன்று … Read more