லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஐ.டி ரெய்டு..!

தமிழகம் மட்டுமல்லாது வேறு பல மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கம், கேரளா , சிக்கிம் போன்ற மாநிலங்களில் விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவை தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பிரமுகராக உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 முதல் 2010 காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரியில் … Read more

விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2023 ஜனவரி 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி … Read more

+2 மாணவர்களே..!! இன்று முதல் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வினியோகம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி … Read more

சார் இது மெட்ரோ ரயில்.. உங்க பெட்ரூம் இல்ல.. பயணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜோடி..!!

டெல்லி மெட்ரோ ரயிலில் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து வரும் பயணிகளால், ஆபாசமாக நடந்து வரும் பயணிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. உள்ளாடையுடன் பெண்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்ததை சிலர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலாகி வந்த நிலையில் , மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மெட்ரோ நிர்வாகம் கடும் … Read more

ரூ.40,000 சம்பளத்தில் வேலை! தேர்வு இல்லை | நேர்காணல் மட்டுமே..!!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி BE, B.Tech, M.Sc, MCA, ME, M.Tech. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த CLRI Chennai Job Notification-க்கு, நேரடி நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்களை CLRI Chennai ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த CLRI Chennai நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://clri.org/) அறிந்து கொள்ளலாம்.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 … Read more

கோவையில் ஆச்சரியம்..! இந்த இரட்டையர்கள் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்தும் பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்..!

கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதி. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவை எடுத்து படித்துள்ளனர். அதன்படி நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ், நிவேதா பிசினஸ் மேக்ஸ் பிரிவும் படித்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நிரஞ்சனும், நிவேதாவும், … Read more

ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!!

மத்திய அரசு 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சம்பளம் பெறும் தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படியானது 1-7-2021 முதல் 189 சதவீதத்தில் இருந்து 196 சதவீதமாகவும், 1-1-2022 முதல் 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே அகவிலைப்படி உயர்வை புதுவை தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வழங்க புதுவை நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை நிறுவனங்களின் சொந்த நிதியாதாரத்தில் இருந்து தான் வழங்கவேண்டும் என்றும், அதற்காக கூடுதல் நிதி எதுவும் … Read more

தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுவடைந்தது. நாளை காலை முதல் வடக்கு – வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு 13.05.2023 மாலை வரை காற்றின் … Read more

தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி!!

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஷிமோகா அருகே சோரடி என்ற இடத்தில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இ.ஜீன் கரோல், டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில் டிரம்ப் 5 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.41 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை … Read more