இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் கூறினார். இளையராஜா இசையமைத்த பாடல்கள் மீதான உரிமைகள் தொடர்பாக எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் தொடர்ந்த வழக்கு கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது. 1970கள் மற்றும் 1990 … Read more

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை… ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி : மு.க. ஸ்டாலின்

மோடியைப் போல் ஒரு வசூல் ராஜாவை நாடு இதுவரை பார்த்ததில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஊழல் பல்கலைக்கழகம் ஒன்று இருந்தால் அதற்கு வேந்தராக இருக்க தகுதியானவர் மோடி என்று கூறிய ஸ்டாலின், பாஜக ஆட்சியில் நடைபெற்ற தேர்தல் பத்திர ஊழல், பி.எம். கேர் நிதி ஊழல், கொரோனா கால ஊழல், ரஃபேல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டார். மேலும், “ஊழல் கறை படித்தவர்கள் பாஜக கட்சியில் சேர்ந்த உடன் அவர்கள் மீதான … Read more

பாஜக 150 தொகுதிகளில் வெல்வதே கடினம் : ராகுல் காந்தி

2024 நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக 150 தொகுதிகளில் வெல்வதே கடினம் என்று கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரம் துவங்கிய போது அக்கட்சி 180 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன் ஆனால் ஒவ்வொரு நாளும் … Read more

ரொட்டிக்கு விதிக்கப்படுவது போல் மலபார் பரோட்டா-வுக்கும் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் : கேரள நீதிமன்றம் ருசிகர தீர்ப்பு

ரொட்டிக்கு விதிக்கப்படுவது போல் மலபார் பரோட்டா-வுக்கும் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலபார் பரோட்டா மற்றும் கோதுமை பரோட்டா ஆகியவற்றுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் இவற்றுக்கு ‘பிரெட்’ பாக்கெட்டுகளுக்கு விதிக்கப்படுவது போல் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் என்று ‘ரெடி டு குக்’ பரோட்டா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், … Read more

திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர்! முதலமைச்சர் ஸ்டாலின் ‘வீடியோ’ பிரசாரம்…

சென்னை: திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர் என நாட்டு மக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க, ஸ்டாலின்  வீடியோ வெளியிட்டுள்ளார். 18வது மக்களவைக்காதன  நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல்  ஏப்ரல் 19-ம் தேதி  தொடங்கி, 7வது கட்ட தேர்தல்  ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  இந்த நிலையில்,  தமிழ்நாடு மற்றும் … Read more

வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை அ.தி.மு.க.வினர் விழிப்புடன் இருங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை அ.தி.மு.க.வினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வாக்குச்சாடி முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில், நாளை மறுதினம் (ஏப்ரல் 19ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களத்தில் 950 வேட்பாளர்கள் உள்ளனர்.  அரசியல் கட்சி வேட்பாளர்கள் உடன்  609 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில் … Read more

தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது: தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்.

சென்னை: தமிழ்நாட்டில் வரும் வெள்ளிக்கிழமை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.வினரின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக,  தேர்தல் ஆணையத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணிக்கு சவால் விடுக்கும் வகையில், அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிகள் மும்முரமாக தேர்தல் பணி யாற்றி வருகின்றன. இதனால் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்து நாளை … Read more

நாளை மறுதினம் வாக்குப்பதிவு: வோட்டர் ஐடி இல்லாதவர்களில் 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம்…

சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை.  அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட, நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ஒவ்வொரு தகுதியான வாக்களரின் அடிப்படை கடமையாகும். தேர்தல் … Read more

மோடியின் கியாரண்டிபோலி கியாரண்டி; காங்கிரஸ் கியாரண்டி பக்கா கியாரண்டி! புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் கார்கே

புதுச்சேரி: “காங்கிரஸின் கியாரண்டி பக்கா கியாரண்டி”  ஆனால், மோடியின் கியாரண்டி போலி கியாரண்டி என புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தின்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று மாலை  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை … Read more

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி… ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது…

ஜூலை 26ம் தேதி துவங்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் போட்டிக்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள பழமைவாய்ந்த ஒலிம்பியா நகரில் அதற்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் ஜோதி கிரீஸ் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மார்ஸெல்லே நகரை சென்றடையும். அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த ஜோதி ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது … Read more