தமிழக வேட்பாளர் முதற்கட்ட பட்டியலை வெளியிட்ட பாஜக

சென்னை தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாமரை சின்னத்தில்  ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. அதாவது, 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட … Read more

கடந்த 8 ஆண்டுகளில் ஈஷா யோகா ஐயத்தில் 6 பேர் மாயம்

சென்னை கடந்த 8 ஆண்டுகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை  காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர், கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் … Read more

டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக பாடகிகளுக்கு மியூசிக் அகாடமி கண்டனம்…

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.எஸ் சுப்புலட்சுமி தொடங்கி மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், பால சரஸ்வதி, பாலமுரளி கிருஷ்ணா என கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் பலரும் பெற்றுள்ள விருதுதான் மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் சங்கீத … Read more

கோலாகலமாக நடைபெற்று வருகிறது திருவாரூர் ஆழித்தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திருவாரூர்: திருவாரூர் கோவில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த எழுச்சிமிகு நிகழ்ச்சியில்  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஆரூரா, தியாகேச என்ற கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.  இவ்வாறு உலகப் புகழ்பெற்ற திருவாரூர்  கோவிலின் ஆண்ட ஆழித்தேரோட்டம்  இன்று காலை திட்டமிட்டப்படி, தொடங்கிய நிலையில்,  திருவாரூர் சட்டமன்ற … Read more

தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையர்கள் நியமனத்தக்கு  தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மத்தியஅரசு சமீபத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில், ஏற்கனவே இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயர் நீக்கப்பட்டு  பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட சிலரை நியமனம் செய்திருந்தது. அதாவது, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் … Read more

லோக்சபா தேர்தல் 2024: இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை  அதிமுக தலைமைகயத்தில் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி என மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் … Read more

திமுக கூட்டணிக்கு ஆதரவு: இன்று முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் காமெடி நடிகர் கருணாஸ்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காமெடி நடிகர் கருணாஸ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலும் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,  வேட்புமனுத்தாக்கல்  மார்ச் 20ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக உள்பட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், திமுகவுக்கு மேலும் சில கட்சிகள், அமைப்புகள் … Read more

ஒரே ஆண்டில் வியட்நாம் அதிபர் ராஜினாமா

ஹனோய் வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் பதவி ஏற்று ஒரே ஆண்டில் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வியட்நாம் நாட்டின் அதிபராக 54 வயதான வோ வான் துவாங், பதவியேற்றார். கொரோனா கால கட்டத்தில் அவருக்கு முன்பு பதவியில் இருந்த குயென் சுவான் புக்,மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாகப் பொறுப்பேற்று பதவி விலகினார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு வோ வான் துவாங் வியட்நாம் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். வியட்நாம் நாட்டில் ஆளும் … Read more

2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே குறி வைக்கும் சசிகலா

தஞ்சாவூர் ஜெயலலிதாவின் தோழியும் அமமுக தலைவருமான சசிகலா 2026ஆம்  ஆண்டு நடைபெற உள்ள தேர்தலைப் பற்றிப் பேசி உள்ளார்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அமமுக தலைவருமான சசிகலா நேற்ற் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சசிகலா, ”நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்பது என்ன? என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அ.தி.மு.க. ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளதாக எனது அனுமானத்தில் கருதுகிறேன்.  தமிழக … Read more

மத்திய இணையமைச்சர் மீது மதுரையில் வழக்குப் பதிவு : தேர்தல் ஆணையத்தில் புகார் 

மதுரை மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது.  கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கியதைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. மத்திய மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்திற்குப் பிறகு ஷோபா செய்தியாளர்களிடம், “பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த … Read more