மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கூட ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது – அமித்ஷா

மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் மகா ஜன்சம்பர்க் அபியான் என்ற பெயரில் வெகுஜன மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை பா.ஜ.க முன்னெடுத்துள்ளது. இதற்காக இன்று சத்தீஸ்கரின் துர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித்ஷா, 9 ஆண்டுகளுக்கு முன், இந்திய நிலத்தில் ஊடுருவி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம் ராணுவ வீரர்களை கொன்று வந்ததாகவும், அப்போதைய காங்கிரஸ் அரசு அதனை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார். மோடி பிரதமரான பிறகும், … Read more

சண்டைக்கு ரெடி: எலான் மஸ்க்-கின் சவாலை ஏற்ற மார்க் ஜூக்கர்பெர்க்!

கூண்டுக்குள் நேருக்குநேர் மோத தயாரா? என எலான் மஸ்க் விடுத்த சவாலை ஏற்றுள்ள மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், மோதலுக்கு தானும் தயாரென சம்மதம் தெரிவித்து உள்ளார். அதோடு மோதலுக்கான இருப்பிடத்தை அனுப்பவும் என ஜூக்கர்பெர்க் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தற்காப்பு கலை வீரர்கள் போட்டியிடும் ”Vegas Octagon” என்ற இடத்தில் மோதலை வைத்துக் கொள்ளலாம் என்று மஸ்க் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். 51 வயதான … Read more

அசாமில் கொட்டித்தீர்க்கும் கனமழை : 108 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

அசாம் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாம் மற்றும் அண்டை நாடான பூட்டானில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால், பக்லாடியா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆற்றை சுற்றியுள்ள 108 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் உயரமான இடங்களில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தஞ்சமடைந்துள்ளனர். அசாம் வெள்ளத்தில் சுமார் 45 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 1 … Read more

மணிப்பூரில் 24ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித்ஷா அழைப்பு

மணிப்பூரில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக நீடிக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர 24ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில், தற்போதயை நிலவரம் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் மாநில அரசின் மீதுமக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். Source link

அறுந்து கிடந்த மின்கம்பி- மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 20 நாட்களாக சீரமைக்கப்படாத மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். செஞ்சி காவல் உட்கோட்டம் கெடார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  சிறுவாலை கிராமத்தில் கடந்த ஜுன் 1-ஆம் தேதி காற்றுடன் கூடிய கனமழை பெய்த போது செல்வராஜ் என்பவர் நிலத்தில் கரும்பு தோட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இது குறித்து பூத்தமேடு மின்துறை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் கடந்த 20-வது நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று … Read more

நானே பாண்டுரங்கன்.. கால்களை அமுக்கி விடு ஸ்ரீதேவி.. பூதேவி..! இப்படியும் ஏமாறுவார்களா ?

மக்களை காக்க ‘மனித உருவில் வந்த கடவுள்’ என தன்னைத் தானே கூறிக்கொண்டு பேச முடியாதவர்களை பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் கூறி நாடகமாடிய தமிழகத்தைச் சேர்ந்த போலி சாமியார் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். நானே மகா விஷ்ணு… நானே பாண்டுரங்கன்… எனக் கூறிக் கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே, தெலுங்கானா பக்தர்களுக்கு பால்கோவா கொடுத்ததாக போலீசாரிடம் சிக்கி உள்ள செஞ்சியை சேர்ந்த போலி சாமியாரான சந்தோஷ் குமார் இவர் தான்..! திருவண்ணாமலை மாவட்டம் … Read more

செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்..!

செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றிற்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக கூறும் வகையில், சிறிய சரக்கு வாகனத்தில் 30 அடி உயர மதுபுட்டி கட்அவுட்டுடன் ஊர்வலமாகச் சென்றனர். மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் … Read more

காஷ்மீர் முதல் குமரி வரை.. எட்டுத்திக்கும் களைகட்டியது 9-வது சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தலைவர்கள், ராணுவ வீரர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். 9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா செய்தார் நாட்டின் முதல் குடிமகளான திரவுபதி முர்மு. மக்களுக்கு அவர் வெளியிட்டுள்ள யோகா தின வாழ்த்து செய்தியில், உடலுக்கும் மனதுக்கும் இடையே யோகா ஒரு சமநிலையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் … Read more

பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரானதல்ல.. வெள்ளைமாளிகை விளக்கம்

பிரதமர் மோடியின் வருகை சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான செயல்பாடு அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அமெரிக்கா உற்சாகமாக வரவேற்றுள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர், ஜான் கிர்பி, உலகளவில் இந்தியா மிகவும் வலிமை வாய்ந்த நாடாக வளர்வதை அமெரிக்கா ஆதரிக்கும் என்று தெரிவித்தார். இந்தோ பசிபிக்கில் சுதந்திரமான வெளிப்படையான வர்த்தகத்தை எட்ட இந்தியாவுடன் … Read more

அமெரிக்காவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு…. பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் சந்திப்பு…!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்காவுக்கு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடியை, நியூயார்க் ஜான் எப். கென்னடி விமான நிலையத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர். விமானநிலையத்தின் வெளியே காத்திருந்த ஏராளமான இந்தியர்கள் பிரதமருக்கு மூவர்ணக் கொடிகளுடன் வரவேற்புத் தெரிவித்தனர். சிலர் ஆடிப்பாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். திரண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை சந்தித்து கைகுலுக்கிய … Read more