ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடனை சேலத்தில் மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!

ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த திருடன் ஒருவனை சேலத்தில் ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர். சென்னையில் இருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தில் அதிகாலை வேளையில் நின்ற போது, ஏ.சி. கோச்சில் இருந்து ஒருவர் இறங்கிச் செல்வதை, ரயிலின் டிக்கெட் பரிசோதகர் பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஏ.சி. கோச்சில் சேலத்தில் இறங்க வேண்டியவர்கள் யாரும் இல்லை என்பதால், சந்தேகமடைந்து ரயில்வே போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதன்பேரில், அந்த நபரை … Read more

பென்சில்வேனியாவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. ஸ்பிரிங்க்டேல் பகுதியில் செஸ்விக் ஜெரேட்டிங் ஸ்டேஷன் என்ற, மின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆலை மூடப்பட்ட நிலையில், செயல்படாமல் இருந்த புகைப்போக்கிகளை கடந்த 2ம் தேதி அந்நிறுவனமே வெடிவைத்து தகர்த்தது. பலத்த சத்தத்துடன் 2 புகைப்போக்கிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்து நொறுங்கியதில், பெரும் புழுதி கிளம்பியது. Source link

216 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. மும்பையிலிருந்து ரஷ்யாவிற்கு தனி விமானம் அனுப்பிய ஏர் இந்தியா

இயந்திரக்கோளாறு காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானத்திற்கு மாற்றாக மற்றொரு விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. டெல்லியிலிருந்து 216 பயணிகள் மற்றும் 16 ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு செவ்வாயன்று புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகதான் விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை ஹோட்டலில் தங்க வைத்த விமான நிறுவனம், அவர்களை மீண்டும் பத்திரமாக சான்பிரான்சிஸ்கோ அழைத்துச் செல்வதற்காக மும்பையிலிருந்து உணவு, குடிநீர் உள்ளிட்ட … Read more

பாட்டில் விற்றால் பிடிப்பியா..? செருப்பை எடுத்து போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்…! அமைச்சரின் பெயரை சொல்லி அச்சுறுத்தல்

ஆலங்குடி அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பாரில் மதுபானம் விற்றவரை போலீசார் பிடித்துச்சென்ற போது மறித்த திமுக பிரமுகர் ஒருவர் போலீசாரை செருப்பால் அடிக்க பாய்ந்ததோடு அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டவிரோதமாக செயல்படும் பாரில் கள்ளத்தனமாக மதுவிற்றவரை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிக்க முயலும் திமுக பிரமுகர் மதியழகன் இவர் தான்..! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வணக்கன்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உரிய அனுமதி இன்றி … Read more

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் அரியவகை சுமத்ரா புலிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் அரியவகை சுமத்ரா புலிக்குட்டிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடின. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் புலிகள், வனப்பகுதிகளில் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள சுமத்ரா புலிக்குட்டிகள், தாய் புலியின் மேற்பார்வையில் குதூகலமாகத் தண்ணீரில் விளையாடி பொழுதுபோக்கின. Source link

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்த மல்யுத்த வீராங்கனைகள்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது, மல்யுத்த அமைப்பிற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது … Read more

ரயில் பாதையில் தென்னைமரக் கட்டை போடப்பட்ட விவகாரம் : சம்பவ இடத்தில் ரயில்வே டிஎஸ்பி நேரில் ஆய்வு

சென்னையை அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் தென்னை மரக்கட்டை கிடந்த இடத்தில் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருநின்றவூர் நேரு நகரில் செந்தில் என்பவர், வீட்டில் தென்னை மரத்தை வெட்டி  ரயில் தண்டவாளம் அருகே  போட்டுள்ளார். மர்ம நபர்கள் சிலர் இதனை எடுத்து ரயில் பாதையில் வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நள்ளிரவில் அவ்வழியே வந்த ரயிலின் இன்ஜினில் தென்னை மரக்கட்டை சிக்கியதால் ரயில் ஓட்டுநர் அதனை அப்புறப்படுத்தி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து ரயில்வே … Read more

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தியது மத்திய அமைச்சரவை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 7 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கான விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் விவரித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 183 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிகபட்சமாக பாசிப்பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவின்டாலுக்கு 8 ஆயிரத்து 558 ரூபாயாகவும், கேழ்வரகுக்கான … Read more

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் நள்ளிரவில் தடம் புரண்டன. ஷாபுரா பிடோனியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சரக்கு ரயிலில் இருந்து எரிவாயுவை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தபோது ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும், ரயில் சேவையும் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  Source … Read more

மும்பையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு..!

மும்பையில் விரார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். உயிரிழந்த பெண்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த மூன்று பெண்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. Source link