தலையில் இரும்பு நட்டை வைத்து தையல் போட்ட அரசு மருத்துவமனை தற்குறிகள்..! அலட்சிய சிகிச்சை அம்பலம்

விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து தையல் போட்டு அனுப்பிய கொடுமை வேலூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கார்த்திகேயன். திங்கட்கிழமை காலை 5 மணியளவில் மாதனூர் அருகே கார்த்திகேயன் ஓட்டிச் சென்ற லாரி பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்’ விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். 3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு தலைவர் முர்மு, 1873-ம் ஆண்டு சுரினாமுக்கு கப்பல் மூலம் இந்தியர்கள் சென்றதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலாச்சார விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள சுரினாமின் உயரிய விருதை இந்திய-சுரினாமியர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். … Read more

ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் மனிதத் தவறா..? நாசவேலையா..? விசாரணையை தொடங்கியது சிபிஐ..

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆம் தேதி பாலசோரில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 278 பேர் பலியானதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆரை மீண்டும் பதிவு செய்துள்ள … Read more

புதுவீடு கட்டித்தருவதாக அரசின் பேச்சை கேட்டு குடியிருப்புகளை காலி செய்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள்.. கட்டுமான பணிகள் துவங்காததால் ஆட்சியரிடம் புகார்..

புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர். மூங்கிலூரணியில் உள்ள மறுவாழ்வு முகாமில் 186 தமிழ் குடும்பத்தினர் 1990 ஆம் ஆண்டு முதல் சிறிய அளவில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முகாம்வாசிகளுக்கு 52 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மே 1 ஆம் தேதி கட்டுமானப் பணி துவங்கி விடும் எனவும் … Read more

13-ஆம் நூற்றாண்டு கட்டப்பட்ட மசூதி மறுசீரமைப்புக்கு பின் மீண்டும் திறப்பு…!

எகிப்தில் 13ம் நூற்றாண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அல்-சாஹிர் பேபர்ஸ் மசூதி, புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1268ம் ஆண்டு கெய்ரோவில் 3 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த மசூதி, எகிப்தின் மூன்றாவது பெரிய மசூதியாக பார்க்கப்பட்டது. பின்னர், பல்வேறு ஆட்சிக் காலங்களில் இராணுவக் கோட்டையாகவும், சோப்பு தொழிற்சாலையாகவும், இறைச்சிக் கூடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு, 225 ஆண்டுகளாக கைவிடப்பட்ட இந்த மசூதி சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், சுமார் 7.69 மில்லியன் டாலர்கள் செலவில் 16 … Read more

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம் – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் தொடர்பான பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அழைப்பவர் அடையாளத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பும் வரை அறிமுகம் இல்லாதவரின் அழைப்பை ஏற்க வேண்டாம் என்று கூறினார். தொலைத் தொடர்பு மோசடிகள் குறித்து புகார் அளிக்க சஞ்சார் சாத் என்ற இணையதளத்தையும் அண்மையில் அவர் தொடங்கி வைத்தார். Source link

ராமநாதபுரம் அருகே 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் படகுடன் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே 2கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக தங்கக்கட்டிகள் மர்மப் படகில் கடத்தி வரப்படுவதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பதிவு எண் இல்லாத பைபர் படகை கண்ட அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது … Read more

ஹைதி நாட்டில் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் பெய்த தொடர் கனமழையால் லியோகன் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பி வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மழையால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. மழை பெய்த பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு … Read more

மே மாதத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பு

மே மாத வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 8 சதவீதமாகும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருந்தால் மின்சார வாகனங்களின் தேவை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விநியோக ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். எனினும் திருமண சீசன் காலங்களில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சாதகமாகவே உள்ளது. மே மாதத்தில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. Source link

திரிணாமூல் பிரமுகர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி வெளிநாடு செல்ல முயற்சி.. தடுத்து நிறுத்திய அமலாக்கத்துறையினர்

திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவரும் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா துபாய் செல்ல முயன்ற போது விமானநிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அபிஷேக்கும் ருஜிராவும் வெளிநாடு செல்லத் தடையில்லை என்ற உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை மீறிய செயல் இது என்று அபிஷேக் தெரிவித்தார். ஊழல் பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் வரும் 8ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் ருஜீராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். Source link