போலி பில் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பு.. நிதி நிறுவன வசூல் மேலாளர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

கட்டிய பணத்திற்கு போலியான ரசீதுகள் வழங்கப்பட்டதாகக் கூறி மேட்டுப்பாளையம் தனியார் பைனான்ஸ் அலுவலகத்தில் பணம் செலுத்தியவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் கோவை சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு தவணை பணம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் பணம் செலுத்துமாறு வந்த போனை தொடர்ந்து அந்த அலுவலகம் சென்று முறையிட்டனர்.  அவர்கள் பணம் கட்டியதற்கான பில்லை காட்டியபோது, அது போலியானது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணம் வசூலித்த நிறுவன ஊழியர் அபிசேக் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. … Read more

ரயில்வே பாதுகாப்பு நிதி குறித்த காங்கிரசின் கேள்விக்கு சிஏஜி அறிக்கை மூலம் பதில்

ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாகப் பயன்படுத்தாது ஏன் என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் மூலம் கேள்வி எழுப்பிய நிலையில், பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பை மேம்படுத்த செலவிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சிஏஜி அறிக்கையை கேட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 2017-18ம் ஆண்டில் 8,ஆயிரத்து 884 கோடி ரூபாயாக இருந்த ரயில் பாதையை … Read more

நள்ளிரவில் கதவை தட்டிய காதலன்… காதலி கண் முன்னே கொடூரம்.. தந்தை உட்பட இருவர் கைது..!

கோவையில், காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற போது ஏற்பட்ட தகராறில், காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். லோடு மேனாக பணிபுரிந்து வந்த பிரசாந்த் என்ற 21 வயது இளைஞர், செட்டிபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிறகு அடுத்தாண்டு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில், பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து … Read more

காலத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாததால் தான் பொறியியல் பட்டதாரிகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை-ஆளுநர்

காலத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாததால் தான் பொறியியல் பட்டதாரிகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். உதகையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைப்பதாக குறிப்பிட்டார். தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காத பொறியியல் பட்டதாரிகள் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அறிவியல் மற்றும் பொறியியல் … Read more

சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற பிரமாண்ட சரக்குக் கப்பல்..!

எகிப்தின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்குக் கப்பல் பழுதாகி நின்றதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற சீவிகோர் என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் நுழைந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்தக் கப்பலின் பின்னால் வந்து கொண்டிருந்த 8 கப்பல்களும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 3 இழுவைப் படகுகள் வரவழைக்கப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று இரட்டைப் பாதையில் நிறுத்தியதாக சூயஸ் கால்வாய் … Read more

ரயில் விபத்து பற்றி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஒடிசா போலீசார்

ரயில் விபத்துக்கு மதச்சாயம் பூசுவோர் மீதும் வதந்திகளைப் பரப்புவோர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக ஊடகங்களில் ரயில் விபத்து குறித்த பல்வேறு தவறான தகவல்களும் உள்நோக்கம் கொண்ட பதிவுகளும் வெளியாகி வருகின்றன. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் இவற்றைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல் துறை விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.  Source link

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்பு-வானிலை மையம்

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தெற்கு அரபிக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுக்கு ஏற்ப மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் கூறினார். Source link

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையருகில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்

பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் வாகா எல்லை அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். தொலைத் தொடர்பு தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று எல்லைத் தாண்டியதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக அவர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். டிரோனில் 3 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருந்ததாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர். Source link

தமிழக பெண்ணிற்கு இந்து முறைப்படி தாலி கட்டிய ஜெர்மன் இளைஞர்

தமிழக பெண்ணை ஜெர்மன் இளைஞர் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டார். சென்னையை சேர்ந்த ஹர்ஷிதா, படிப்பிற்காக ஜெர்மன் சென்ற போது டேவிட் ஹான்சயில்ட் என்பவரை காதலித்துள்ளார். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த நிலையில், சனிக்கிழமையன்று சென்னையில் ஜெர்மன் நாட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க ஹர்தாவிற்கு, டேவிட் ஹான்சயில்ட் இன்று தாலி கட்டினார். திருமண விழாவில், மணமகனின் உறவினர்கள் புடவை, வேஷ்டியில் திருமண சடங்குகளில் … Read more

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் இரு வழித்தடத்திலும் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து 51 மணி நேரம் கழித்து, தெற்கு நோக்கிய தடத்தில் முதல் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இன்று காலை குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளது. ஒடிசா மாநிலம் பாஹநஹாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, இருபது ஆண்டுகளில் இல்லாத கோர ரயில் விபத்து…. அடுத்தடுத்து இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கி சரிந்த பெட்டிகளில் மனிதர்கள் … Read more