புதுச்சேரி: கேட்பாரற்று சாலையில் கிடந்த ரூ.49 லட்சம் – மீட்க உதவிய 3 பேருக்கு பாராட்டு

புதுச்சேரி அண்ணாசாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த 49 லட்சம் ரூபாயை போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்க உதவிய மூன்று பேரை, கிழக்கு காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டினார். புதுச்சேரி அண்ணாசாலை செட்டி தெரு சந்திப்பில் கடந்த வெள்ளி கிழமை காலை பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த டீ கடை உரிமையாளர், ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து … Read more

"தாய் தமிழை அழிக்க வந்த ஒரு அமைப்பு திமுக" – ஹெச்.ராஜா விமர்சனம்

திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் கடலில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசுகையில் ” முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆட்சி, கட்சி, குடும்பம் கட்டுப்படவில்லை, திமிரு எடுத்தவர்கள் எல்லாம் திமுகவில் இருக்கின்றனர். வாலை ஒட்ட நறுக்கி விடுவோம், … Read more

வடமாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. வீடுகளில் விரிசல்.. வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் பணி முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்பிய நிலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேவந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நில அதிர்வு அடங்கி எந்த பாதிப்புகளும் இல்லை என தெரிந்தபிறகே வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் … Read more

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா..? உங்களுக்கு இன்னும் 10 நாட்கள்தான் கெடு இருக்கு!

“ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வங்கி தொடங்கி, அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023, ஏப்ரல் 1ஆம் தேதி … Read more

விவேக் முதல் கோவை குணா வரை.. மாரடைப்பால் மரணமடைந்த 10 சினிமா நட்சத்திரங்கள்!

திரையுலகைச் சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் இறந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தவர், கோவை குணா (54). கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்சனையால் டாயாலிஸ் செய்துவந்த அவர், சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், ’சென்னை காதல்’ என்ற படத்திலும் கோவை குணா … Read more

மாரடைப்பால் மற்றொரு மரணம்.. மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்!

பிரபல நகைச்சுவை கலைஞரான கோவை குணா (54), உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தவர், கோவை குணா. அந்த நிகழ்ச்சிகள் மூலம் உலக அளவில் பிரபலமடைந்ததுடன், தன்னுடைய தனித்துவ உடல்மொழியாலும் ரசிகர்களை ஈர்த்தார். குறிப்பாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணிபோல் மிமிக்ரி செய்வதுடன், அவர்போலவே அச்சுஅசலாக நடித்துக் காட்டக்கூடியவர். இதனால், அந்த நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களும், நடுவர்களும் கவுண்டமணிபோல் செய்யும் மிமிக்ரியை மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லி … Read more

ஓடிடியிலும் சாதனை படைக்குமா ‘பதான்’? – தமிழ் உள்பட 3 மொழிகளில் எப்போது வெளியீடு?

நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தத் திரைப்படம் 50 நாட்களையும் கடந்து வெற்றிக்கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்களை நெருங்க உள்ள நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், இந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி … Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம்? – மத்திய அரசு கொடுத்த விளக்கம்!

ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டுவர தேவையான சட்டங்களை மாநில அரசு இயற்ற அதிகாரம் உள்ளது என மக்களவையில் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும், இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. ஆளுநர் இந்த விவகாரத்தில் தாமதம் செய்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், சரியாக சட்டம் கொண்டு வராவிட்டால் பின்னால் ரத்தாகும் … Read more

ரஜினி மகளின் வீட்டில் திருடிய நகையை வைத்தே ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு! விசாரணையில் அம்பலம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவர் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஈஸ்வரி என்பவர்தான் சிறுக சிறுக நகையை திருடி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், திருடிய நகையை வைத்து சோழிங்கநல்லூரில் 1 கோடி மதிப்பில் சொகுசு வீடு வாங்கியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்  அம்பலமாகியுள்ளது. தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு! காரணம் இதுதான்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார் சிவக்குமார். இவர் நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலராகவும் செயல்பட்டார். இவர் பல்லாவரத்தில் ஆணையாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததின் அடிப்படையில் பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட வந்தபோது … Read more