உள்நோயாளிகள், மாணவர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்படுமா? மாநில தேர்தல் அதிகாரி பதில்

உள்நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக உள்ளவர்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தபால் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளதாக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சையதுபாபு என்பவர், தமிழக தலைமைத் தேர்தல் … Read more

சேலம்: கையில் துப்பாக்கியுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற குடும்பம்! என்ன காரணம்?

சேலத்தில் கையில் துப்பாக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் ஏற்காடு பகுதியில் அசம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர், தனக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இதையடுத்து நிலத்தின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்று கடந்த 25 ஆண்டுகளாக துப்பாக்கி வைத்திருந்ததோடு, ஏற்காடு காவல் நிலையத்தில் துப்பாக்கி உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பித்தும் இருந்துள்ளார் பழனிவேல். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு … Read more

அமேசானில் மேலும் 9,000 ஊழியர்கள் பணி நீக்கம்? அடுத்தடுத்த அறிவிப்பால் அதிர்ச்சி!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் விதிவிலக்கல்ல. அமேசான் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜாஸி அடுத்த சில … Read more

“தமிழக பட்ஜெட் கனவு பட்ஜெட் அல்ல… காகித பூ பட்ஜெட்” – வைகைச் செல்லவன் விமர்சனம்

“நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மகளிருக்கு உதவித்தொகை வழங்க திட்டமிட்டு இருக்கின்றனர்” என திமுக அரசை முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அம்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று விழா பேருரை ஆற்றினர். முன்னதாக சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மகளிர்க்கு தையல் எந்திரங்கள், … Read more

”வெடிமருந்து உட்கொண்ட தடயங்கள்” – பெண் காட்டு யானையின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்!

பொள்ளாச்சி அருகே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், யானை வெடிமருந்து உட்கொண்டதால் தான் இறந்துள்ளதாக முடிவு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் மெலிந்த நிலையில் இருந்த பெண் காட்டு யானையை வனத்துறையினர், கும்கி யானை உதவியோடு மயக்க ஊசி செலுத்தி கடந்த 17ஆம் தேதி பிடித்தனர். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதி வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்து யானைக்கு … Read more

புதுடெல்லியில் ஜப்பான் பிரதமர்; ஜி-7 மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைப்பு?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர்  புமியோ கிஷிதா ( Fumio Kishida) -வுக்கு பிரதமர் நரேந்திரமோடி சந்தனத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை பரிசாக அளித்தார். கர்நாடகத்தின் பிரசித்தி பெற்ற வேலைப்பாடு மிக்க பெட்டியில் வைத்து, கர்நாடக கலைஞர்களின் படைப்பான புத்தர் சிலையை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அடக்கம் செய்த உடலை மீண்டும் தோண்டி எடுத்த காவல்துறை.. பல்லடம் அருகே பரபரப்பு!

பல்லடம் அருகே தற்கொலை செய்து கொண்டவரின் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேற்கு பல்லடத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி விஜயா. இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மகளும் ஜனகராஜ் மற்றும் சரவணன் ஆகிய மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் முருகன் மற்றும் விஜயா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத நிலையில் அவதிப்பட்டு வந்த முருகன், மனைவியுடன் … Read more

சிக்கிய ஆயுதங்களில் ’AKF’ முத்திரை.. தனி ராணுவத்தை உருவாக்க நினைத்தாரா அம்ரித்பால் சிங்?

பஞ்சாப்பில் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவரான அம்ரித்பால் சிங், தப்பியோடிய நிலையில் அவர்மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு … Read more

அடுத்த வாரம் திருமணம்.. திடீரென இறந்த தந்தை; மகன் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் ஆசையை நிறைவேற்ற தந்தையின் சடலம் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் ஊராட்சிமன்ற தலைவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன் உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.  உயிருடன் இருக்கும்போது தனது மகன் பிரவீன் என்பவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு … Read more

”போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரித்துவிட்டார்கள்” – கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் சகோதரர்கள் மனு

போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து தங்களுடைய சுமார் 1 கோடி மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிப்பு செய்துவிட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் சகோதரர்கள் நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெலத்தூர் கிராமத்தை சார்ந்த ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய இரண்டு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவினைக் கொடுத்தனர். அந்த மனுவில், “கிருஷ்ணகிரி … Read more