'பிரதமர் மோடியின் மிகப்பெரிய டிஆர்பி ராகுல் காந்திதான்" – மம்தா பானர்ஜி தாக்கு

‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ திட்டத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நேற்று நடந்த கட்சிக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசினார். ‘பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய டிஆர்பி தான் ராகுல் காந்தி’ என்று கட்சியினர் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியை தலைவராக … Read more

“மனரீதியா ரொம்ப துன்புறுத்துறாங்க” பணியை ராஜினாமா செய்த தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர்

காவல் ஆய்வாளரொருவர் தனது பாலினம் குறித்தும் சாதி குறித்தும் இழிவாக பேசி மனரீதியாக துன்புறுத்துவதால், தனது காவலர் வேலையை ராஜினாமா செய்யப்போவதாக திருநங்கை காவலர் நஸ்ரியா, கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புகார் குறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரிப்பார் என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். கோவை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் முதலாவது மற்றும் இந்தியாவின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர், ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், பின் கோவைக்கு … Read more

விலாசம் கேட்பதுபோல் நடித்து தொழிலதிபர் வீட்டில் 36 லட்சம் பணம் 80 சவரன் நகை கொள்ளை

புதுச்சேரியில் வீட்டு வாசலில் நின்றிருந்த தொழிலதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டிற்குள் புகுந்து ரூ.36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (60). மதுபானக் கடை மற்றும் இறால் பண்ணை வைத்திருக்கும் தொழிலதிபரான இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பு … Read more

"ஜி.கே.வாசன் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு கீழ் பணியாற்ற தயார்"- கே.எஸ்.அழகிரி

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும். வாசனுக்கு கீழ் பணியாற்றுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,; அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு … Read more

இளைஞர்களே சட்டமன்ற உறுப்பினர்களாகும் கனவை விட்டு விடாதீர்கள் – அண்ணாமலை

கனவுகளை விட்டு விடாதீர்கள் கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இளைஞரணி நிர்வாகிகளிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் பாஜக இளைஞரணி சார்பில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து மாதிரி நாடாளுமன்றம் மற்றும் மாதிரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதில் பாஜக … Read more

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்.. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

மதுரை கோட்டத்தில் 85 சதவீதம் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கு உண்டான அறிவிப்பை, மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது. அதன்படி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் தலைமையில், ரயில்வே அதிகாரிகள் இன்று புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ஆய்வுசெய்து, அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், என்னென்ன பணிகள் … Read more

”சேதமடைந்த வீட்டில் வாழ்கிறேன்”.. மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனையின் கண்ணீர் கோரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனையான பூலட்சி, தமக்கு ஒரு வீட்டை தமிழக அரசு இலவசமாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. ஆனாலும் சாதனை செய்யும் பெண்! கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த பூதிமூட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலட்சுமி (35). இவர், அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் கார்த்திகா(17), மகன் பிரதீப்குமார்(16). இவர்கள் முறையே வேப்பனப்பள்ளி அரசுப் … Read more

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வங்கி உதவி மேலாளர் செய்த செயல்! இப்போது சிறைவாசம்!

ஆன்லைன் சூதாட்டம் மீதான அதீத மோகத்தால், வங்கியில் செலுத்தப்படும் கல்வி கடன் காப்பீட்டு தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல், ரூ.34.10 லட்சத்தை மோசடி செய்த எஸ்.பி.ஐ பேங்க் உதவி மேலாளரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ( ராஸ்மிக் ) கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விருதுநகரைச் சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் (38). இவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி … Read more

திரையரங்குகளில் 3 வாரங்களைக் கடந்த ’அயோத்தி’.. கொண்டாடிய படக்குழு! ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

திரையரங்குகளில் மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் ’அயோத்தி’ படத்தின் வெற்றியை, அப்படக் குழு கேக் வெட்டி கொண்டாடியது. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த படம் ‘அயோத்தி’. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ரவீந்திரன் தயாரித்திருந்தார். கடந்த மார்ச் 3ம் … Read more

எங்கெங்கும் வெப்பம்! உச்சத்தை தொடும் மின்சார பயன்பாடு! கடந்த நிதியாண்டுடன் ஓர் ஒப்பீடு!

இந்தியாவில் கடந்த நிதியாண்டைவிட, இந்த நிதியாண்டில் இந்தியாவின் மின் நுகர்வு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டைவிட அதிகரித்த மின் நுகர்வு..  இந்த நிதியாண்டில் ஏப்ரல் – பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 10 சதவீதம் அதிகரித்து 1375.57 பில்லியன் யூனிட்டுகளாக (BU) உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவைவிட, இந்த ஆண்டு மின் நுகர்வு அதிகரித்திருப்பதாகவும் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2021 – 22ஆம் ஆண்டு ஏப்ரல் … Read more