செந்தில் பாலாஜிக்கு வழிகாட்டிய உயர் நீதிமன்றம்: ஜாமீன் வேணுமா, இந்த பக்கம் போங்க!

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ஜாமீன் பெறவில்லை. ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஐந்து நாள்கள் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 120 பக்க அளவிலாக குற்றப்பத்திரிக்கை மற்றும் சுமார் 3000 பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் நகலும் செந்தில் பாலாஜி தரப்புக்கு … Read more

Leo vs Jailer: லியோ கண்டிப்பாக ஜெயிலர் வசூலை பீட் பண்ணாது..ஒரு லட்சம் பந்தயம் கட்டிய பிரபல நடிகர்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தில் ஷிவ்ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை … Read more

Xiaomi 13T Pro 1TB ஸ்டோரேஜ், MediaTek ப்ராசஸர்! இணையத்தில் லீக் ஆன ஸ்பெக்ஸ் முழு விவரங்கள்!

Xiaomi 13T Pro மாடல் செப்டம்பர் 16ம் தேதி வெளியாகலாம் என்று சமீபத்தில் டிப்ஸ்டர்கள் இணையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். 6.67இன்ச் டிஸ்பிளே , MediaTek DM9200+ ப்ராசஸர், 120W சார்ஜிங் வசதி, இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து டிப்ஸ்டர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்துள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​Xiaomi 13T Pro-ல் ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Xiaomi 13T Pro மொபைலில் அதிநவீன MediaTek Dimensity 9200+ … Read more

Jawan: ஷாருக்கான் மீட் பண்ண நினைக்கும் தமிழ் நடிகர் இவர்தானாம்..ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஜவான்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஒரு சில ஆண்டுகளாக தொடர் தோல்வியில் இருந்த ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் மிப்பெரிய வெற்றியை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பினார். இதையடுத்து அட்லீயின் இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் நயன்தாரா, … Read more

iQoo Z7 vs Realme 11 Pro vs Redmi note 12 Pro, எது சிறந்த ஸ்மார்ட்போன்? விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு!

டெக் உலகில் நாளுக்கு நாள் புதிய மொபைல் போன்கள் வெளியாகி வருகின்றன. எந்த இடத்தில் சென்று எந்த மொபைலை வாங்குவது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை கண்டுபிடிப்பது பலருக்கும் கடினமான ஒன்று. அதற்காகவே சமீபத்தில் வெளியான மூன்று முக்கிய நிறுவனங்களின் மொபைல்களான iQoo Z7 , Realme 11 Pro மற்றும் Redmi note 12 pro ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் இந்த தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ​ப்ராசஸர்சமீபத்தில் வெளியாகியுள்ள iQoo Z7 மொபைலில் 8GB LPDDR4X ரேமுடன் கூடிய … Read more

10,000 எஞ்சினியரிங் சீட்டா? அண்ணா பல்கலைக்கழகம் சர்ப்ரைஸ்… இதுல இப்படி ஒரு காரணம் இருக்காம்!

TNEA 2023 எனப்படும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. முதலில் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மானவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதையடுத்து மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம்ஆன்லைனில் மூன்று ரவுண்ட் கவுன்சிலிங்கின் … Read more

அடங்குற ஆளா ஜெயிலர்!, 4வது ஞாயிற்றுக்கிழமையில் கூட மாஸ் வசூல்: எத்தனை கோடினு தெரியுமா?

Jailer Blockbuster: ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸாகி 4 வாரங்கள் ஆகிவிட்டாலும் வசூல் நல்லபடியாக வந்து கொண்டே இருக்கிறது. ​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை தான் ஜெயிலர் வசூல் நடக்கும் என்றார்கள். ஆனால் நான்காவது வாரத்திலும் ஜெயிலர் படம் தினமும் கோடிகளில் தான் வசூல் செய்து கொண்டிருக்கிறது.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர … Read more

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? ஓபிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பு – எடப்பாடிக்கு ஷாக்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் மக்கள் மன்றத்தை நாடி புரட்சிப் பயணத்தை தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற இருந்த முதல்நாள் பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் தனது பயணத்தை தொய்வின்றி தொடர்ந்துள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ் அடுத்த பிளான்!அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு தனக்கான அடித்தளத்தை வலுவாக போட்டுள்ள நிலையில் … Read more

iOS 17 அப்டேட் வரப்போகும் ஐபோன் மாடல்களின் பட்டியல்! இந்த மாதமே வெளியாக வாய்ப்பு!

கடந்த ஜீன்‌ மாதத்தில் இருந்து iOS 17 beta நிலையில் இரண்டு வகைகளில் டெவலப்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வெவ்வேறாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு iOS 17 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 12 ஆப்பிள் நிகழ்ச்சி செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில், ஐபோன் 15 சீரிஸ் மற்றும் இதர ஆப்பிள் தயாரிப்புகளும் வெளியாக உள்ளன. ஐபோன் 15 கண்டிப்பாக iOS 17 … Read more