"பாகிஸ்தானை இந்தியா பகைத்திருக்கக் கூடாது".. சீமான் திடீர் பேச்சு

நீலகிரி: பாகிஸ்தானுடன் இந்தியா பகையாக மாறி இருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு இந்தியா பிரசவம் பார்த்ததாகவும் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று இரவே அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

மக்களவை தேர்தல் 2024: பாஜக தீட்டிய மெகா சோஷியல் மீடியா பிளான்… பெருசா இறங்கும் வாரியர்ஸ்!

இந்திய அரசியல் களம் பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மும்முரமாக காய் நகர்த்தி வருகின்றன. ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி, மறுபக்கம் இந்தியா கூட்டணி. ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது, தேர்தலுக்கான களம் அமைப்பது என அனல் பறக்கிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாஜகவின் சோஷியல் மீடியா வாரியர்ஸ்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றி ஒட்டுமொத்த நாட்டையும் கதிகலங்க வைத்து விடுவார்களா? என்ற அச்சம் … Read more

கத்ரீனா கைஃபை முந்திய நயன்தாரா: இன்ஸ்டாகிராமில் புது சாதனை

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா ஆகஸ்ட் 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். தன் இரட்டை மகன்கள் உயிர், உலகுடன் ஸ்டைலாக நடந்து வந்த வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என போஸ்ட் போட்டார். மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டிய நயன்தாரா: விக்னேஷ் சிவனிம் மன்னிப்பு கேட்கும் ரசிகாஸ் நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்ததில் ஒரு சந்தோஷம் என்றால், உயிர், உலகின் முகத்தை முதல் முறையாக பார்த்ததில் தனி சந்தோஷம் என அன்றைய தினம் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்.. "இப்போ நாங்க சொல்ல மாட்டோம்".. அப்புறம்தான் சொல்வோம்.. அன்புமணி ராமதாஸ்

சென்னை: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ நடைமுறை குறித்து இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது என்றும், சிறிது காலம் கழித்துதான் சொல்ல முடியும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல்களையும் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ முறையை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றையும் மத்திய … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த ஆதித்யா எல் 1… அசத்தல் அப்டேட் கொடுத்த இஸ்ரோ!

ஆதித்யா விண்கலம் இந்திய விண்வெணி ஆய்வு மையமான இஸ்ரோ முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்கிறது. இதனை முன்னிட்டு ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு ஆதித்யா விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான் 3 போல் இந்த ஆதித்யா விண்கலம் 4 மாதங்கள் அதாவது 125 நாட்கள் கழித்தே சூரியன் குறித்த ஆய்வு … Read more

Rajinikanth: ரஜினிக்கு தலைவர் 171 கடைசி படமாக இருக்காது..முடிவை மாற்றிய தலைவர்..!ஏன் தெரியுமா ?

​ஹிமாலய வெற்றிரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியை பெற்றது. ரஜினிக்கும், நெல்சனுக்கும் எதிர்பார்த்த வெற்றியை இப்படம் தேடி தந்து அவர்களை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஜெயிலர் … Read more

'இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? உண்டியல்ல இருந்து கைய எடுங்க' உதயநிதியை வச்சு செய்த கஸ்தூரி!

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சரும் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சனாதன எதிர்ப்பு மாநாடு என்றில்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என தலைப்பு வைத்ததை பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர் சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது, ஒழித்தே ஆக வேண்டும் என்ற அவர், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் எதிர்க்கக்கூடாது, ஒழித்துதான் ஆக வேண்டும் என்றார். அதுபோலத்தான் இந்த சனாதனமும் … Read more

திருப்பதி பிரமோற்சவம்… கையெழுத்தான ஒப்பந்தம்… 300 சிறப்பு பேருந்துகள்… வெளியான அதிரடி அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. திருப்பதி பிரமோற்சவம்திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் 18 ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா தொடங்க உள்ளது. பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி திருமலை தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தரிசனங்கள் ரத்துகுறிப்பாக சாமானிய மக்களும் எளிதாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் வழிவகை செய்து … Read more

Lokesh kanagaraj: தன் நண்பர்களுக்காக லோகேஷ் கனகராஜ் செய்யவுள்ள காரியம்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!

லோகேஷ் கனகராஜ் இன்று இந்திய திரையுலகிலேயே மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாத ஒருவர். வங்கியில் பணிபுரிந்து வந்த லோகேஷ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு மூச்சாக சினிமாவில் இரங்கி போராடி வந்தார். அந்த போராட்டத்திற்கான பலனை தான் லோகேஷ் தற்போது அனுபவித்து வருகின்றார். இன்று தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் … Read more

"சீமான் கைது".. அதிரடியாக கூறிய சவுக்கு சங்கர்.. அப்போ நடந்துரும் போலயே..

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படலாம் என்று பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் இதுவரை கூறிய பல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வரும் நிலையில், சீமானும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றி சென்றுவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் … Read more