உலக பூமி தினம் இன்று

உலகம் பூராகவும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலக பூமி தினம், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை “பூமி மற்றும் பிளாஸ்டிக்” எனும் தொனிப்பொருளில் 2040ஆம் ஆண்டளவில் பிளாஸ்டிக் பாவனையை 60வீதத்தினால் குறைப்பதை நோக்காகக் கொண்டு இம்முறை சர்வதேச பூமி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்கா உட்பட 196 இற்கும் அதிகமான உலக நாடுகள் இப்பூமி தினத்தை அனுஷ்டிக்கின்றன. சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை, அழகு மிக்க பூமியின் … Read more

மட்டக்களப்பில் “அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம்” 2024

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 தொடர்பான தரவரிசைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் இன்று (22) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இம்முன்னாயத்த தரவரிசைப் படுத்தல் குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு அணிகள், விபரக்குறிப்பு, நிபந்தனைகள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் போது அணிகளுக்கான தரவரிசை இலக்கங்கள் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டன. அரசாங்க அதிபர் விளையாட்டுக் கிண்ணம் 2024 … Read more

இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து கலந்துரையாடல்…

இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து உலக வங்கியின் நீர்த்துறைசார் குழுவினருடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளபப்பட்டதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். அப்பதிவில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… உலக வங்கியின் நீர்த்துறைசார் குழுவினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இதன்போது இலங்கையில் நீர்த்துறைக்கு புதியதொரு கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது. அத்துடன், நீர்த்துறையில் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமையும் … Read more

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் நுவரெலியாவில் திறப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் இன்று (22) நுவரெலியாவில் திறக்கப்படவுள்ளதாக, ஆணையாளர் ஜீ. பிரதீப் சப்புத்தந்திரி தெரிவித்தார். இதுவரை காலமும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் கண்டியில் சிறிய அலுவலகமாக இயங்கி வந்தது. இவ்வலுவலகம் நுவரெலியா நகரில் இலக்கம் 95/26ஏ, லேடி மெகலம் வீதி, ஹாலியெல என்ற புதிய முகவரிக்கு இடமாற்றப்படவுள்ளது. இங்கு சாதாரண சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விரைவில் ஒரு நாள் சேவையும் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் … Read more

பத்தாயிரம் வீடுகளை பெருந்தோட்டப் பகுதியில் நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பம்

பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகளை நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வீடுகள் நிருமாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார். ஒரு வீட்டிற்கு 28இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிருவாகங்களின் ஊடாக இந்த வீட்டுத்திட்டத்திற்குப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவர். வீட்டுத் திட்ட நிருமாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களில் பத்தாயிரம் … Read more

கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று … Read more

ஜனாதிபதி அம்பேவெல பால் பண்ணைக்கு கண்காணிப்பு விஜயம்

• அம்பேவல பண்ணை பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்ட முறையான வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்பு குறித்து ஜனாதிபதி பாராட்டு. உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) முற்பகல் அங்கு விஜயம் செய்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 டிசம்பர் மாதத்தில் அம்பேவெல பால் பண்ணைக்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது வழங்கப்பட்ட பணிப்புரைகளின்படி, … Read more

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த தவறு இன்றும் செய்யப்படுகின்றது

நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள்  அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று   இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை  இன்றும் செய்துவருகின்றனர்  என  தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். உமண்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் (19) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான  முதலாவது வதிவிட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு  பேசும் … Read more

15000 ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டம்

இம்முறை சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பில் நிலக்கடலையினைப் பயிரிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள அநுராதபுர மாவட்டப் பணிப்பாளர் தேனுவர தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இம்முறை சிறுபோகத்தின் போது 15,000 ஏக்கரில் அதிக விளைச்சலைத் தரும் நிலக்கடலையினைப் பயிரிடுவதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கிணங்க, இம்முறை அநுராதபுர மாவட்டத்திலும் அதிகமான நிலப்பரப்பில் நிலக்கடலையினை உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாகத் தேவையான நிலக்கடலை விதைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டள்ளது. அவ்விவசாயிகள் இதனால் … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 20ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024ஏப்ரல் 19ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் … Read more