சித்திரை புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமையட்டும்

பிறந்திருக்கும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். ”பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டு இலங்கைவாழ் மக்களுக்கு சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும். பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புத்தாண்டானது, சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு பண்டிகையாக உள்ளதுடன், நாட்டின் தேசிய கலாச்சாரமாகவும் திகழ்கிறது. மக்கள் எல்லோரும் ஒன்றாக வாழக்கூடிய … Read more

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறை சார் அதிகாரிகளும்  (12)  குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.  மேலும் யாழ் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது. இந்நிலையில் … Read more

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் … Read more

சித்திரை புத்தாண்டை  பொது மக்கள் மிக அவதானத்துடன்  கொண்டாட  வேண்டும்

சித்திரை புத்தாண்டை  பொது மக்கள் மிக அவதானத்துடன்  கொண்டாட  வேண்டும் விபத்துக்களை தவிர்த்தும் பட்டாசு கொளுத்தும் சந்தர்ப்பங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த புத்தாண்டை நாம் கொண்டாட வேண்டும் மாவட்டத்தின் சகல  பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது   – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்  சகல துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டை  … Read more

புத்தாண்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தேவையான எரிபொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் பிரதான முனையங்கள் மற்றும் பிராந்திய களஞ்சியசாலைகளில் போதுமான இருப்புக்களை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதேவேளை, பண்டிகை காலத்தில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் … Read more

புத்தாண்டின் உண்மையான உரிமை எமது பிள்ளைகளுக்கே உரித்தானதாகும்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அல்லது சித்திரைப் புத்தாண்டு இலங்கை தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும். இவ்வாறாக, மங்களகரமான சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் மற்றும் சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து, பாரம்பரிய மரபுகளைப் பேணி, ஒரே நேரத்தில் ஒரே நோக்கத்துடன் ஒரே சுபநேரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதை உலகில் வேறு எந்த நாட்டின் கலாச்சாரத்திலும் காண முடியாது. இயற்கையோடு ஒன்றித்திருந்த எமது முன்னோர்கள் புத்தாண்டில் அதை இன்னும் நிஜமாக்கினார்கள். அவர்களின் வழிவந்தவர்கள் என்ற முறையில் உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், கலாசாரம், … Read more

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியிடமிருந்து சிறுவர் இல்லங்களுக்கு பரிசு

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தேற்று (12) முன்னெடுக்கப்பட்டது. வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிக் கிட்ட வேண்டும் என்ற நோக்கில், “சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி அலுவலகம், “சிலோன் பிஸ்கட் கம்பனி” மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் … Read more

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.மீ மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 12ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று முதல் (11) நாட்டில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் … Read more

இன்றும் (12) நாளையும் (13) மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு.

ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி பெற்ற இடங்கள் தவிர, கலால் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து சில்லறை விற்பனைக்கான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் ஆணையர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் உரிமம் பெற்ற மூன்று நட்சத்திர வகுப்பிற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் விசேட அனுமதி பெற்ற இடங்களுக்கு … Read more

IndiGo இலங்கையுடனான தொடர்பை வலுப்படுத்துகிறது – இன்று முதல் மும்பை-கொழும்பு நேரடி விமான சேவை

IndiGo ஏப்ரல் 12 முதல் மும்பை-கொழும்பு நேரடி விமானங்களை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது இணைப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, IndiGo வாரத்தில் மூன்று முறை செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. IndiGo கொழும்பில் இருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு பயணிக்கிறது (சென்னை ஒரு நாளைக்கு இரண்டு முறை, பெங்களூர் ஒரு நாள் மற்றும் ஹைதராபாத் வாரத்தில் ஆறு நாட்கள்). இந்த புதிய பாதை விஸ்தரிப்பின் மூலம், இது நான்கு இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள … Read more