செனுக் விஜேசிங்கவின் ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி கண்டுகளித்தார்

சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ மற்றும் நெரஞ்சன் டி சில்வா ஆகியோருடன் இணைந்து செனுக் விஜேசிங்க வழங்கிய ‘My Tribute’ இசை நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் நேற்று (19) பிற்பகல் கண்டுகளித்தார்கள். கொழும்பு லயனல் வென்ட் திரையரங்கில் நடைபெற்ற ‘My Tribute’ இசைநிகழ்ச்சியில் கிறிஸ்டோ பிரின்ஸ் டிரம்ஸ் இசைத்ததோடு நதினி ஒலேகாசெக்ரேம் மற்றும் ஹேமால் குருவிதாராச்சி ஆகியோரும் கலைஞர்களாக இதில் இணைந்து கொண்டனர். சோல் சவுண்ட்ஸ் அகாடமி பாடகர் குழுவினர் … Read more

வீண்விரயம் மற்றும் ஊழல்களை ஒழித்து 2024 ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாடு முன்னேற்றம் அடைந்தால் அதன் நன்மை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்தான். கடந்த (18.03.2024) உடுகம ஆதார வைத்தியசாலையின் நான்கு மாடிக் கட்டிடம் மற்றும் நியாகம பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிக் கட்டிடத்தின் முதல் கட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். தென்மாகாண சபை ஒதுக்கீடு மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகளை … Read more

ஆப்கானிஸ்தான் 'ஏ' கிரிக்கெட் அணி இலங்கைக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது..

ஆப்கானிஸ்தான் ‘ஏ’ கிரிக்கட் அணி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், இலங்கை ‘ஏ’ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், நான்கு ஒரு நாள் போட்டி வனாத்தமுல்ல பி. சரவணமுத்து மைதானத்திலும் நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டி 2024 ஏப்ரல் மாதம் 28ஆம் … Read more

பாடசாலை மாணவிகளுக்காக சுகாதாரத் துவாய்களைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆரம்பம்

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து வழங்குவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். தரம் 6 இற்கு மேற்பட்ட மாணவிகளுக்காக வழங்கப்படவுள்ள இத்துவாய்கள், எட்டு இலட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. அதற்கான வவுச்சர்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நேற்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், கல்வி விடயங்களில் ஆறாம் ஆண்டிலிருந்து 9ஆம் ஆண்டு வரை விஞ்ஞானமும் சுகாதாரம் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைக் … Read more

பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனம் கைசாத்து

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கைசாத்திடப்பட்டது. 20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. அதன்படி கல்விச் … Read more

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்த இரண்டு விவசாயிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 4 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக சுதர்ஷன. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். இந்த இளம் விவசாயிகள் தமது அறுவடையின் ஒரு பகுதியுடன் … Read more

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன

162 பாலங்கள் அடுத்த ஓகஸ்ட் மாதத்திற்கு முன் மக்கள் பாவனைக்கு- இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே … Read more

உயர்தர பொறியியல் தொழில்நுட்ப செயற்முறைப் பரீட்சைகள் இன்று (19) முதல் ஆரம்பம்

2023(2024) கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் தினங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க இன்று மார்ச் மாதம் 19 முதல் 29 ஆம் திகதி நாடு பூராகவும் தெரிவுசெய்யப்பட்ட 41 மத்திய நிலையங்களில் இச்செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பரீட்சர்த்திகளின் அனுமதிப்பத்திரங்களில் பரீட்சைக்கான திகதி மற்றும் நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டது. அவ்வாறே தமக்கு சம்பந்தப்பட்ட திகதி மற்றும் … Read more

பாடசாலைப் பாடநூல் அல்லது சீருடை கிடைக்காத பாடசாலைகள் இருப்பின் உடனடியாக அறிவிக்கவும் – கல்வி அமைச்சின் அறிவித்தல்

அரசாங்கத்தின் சகல பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் வருடத்திற்கான பாடநூல் மற்றும் சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதற்கிணங்க சகல பாடசாலைகளுக்கும் பாடநூல்கள் மற்றும் சீருடைகள் நாடு பூராகவும் உள்ள சகல வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதுவரை பாடசாலைப் பாடநூல்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை ஏதேனும் காணப்படுமாயின் அது தொடர்பாக பின்வரும் தொலைபேசிஃ பெக்ஸ்ஃ மின்னஞ்சல் ஊடாக உடனடியாக கல்வி அமைச்சிற்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு … Read more

பதுளையில் கணனிப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 80 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கைத்தொழில் அமைச்சின் மேற்பார்வையில் பதுளை மாவட்ட செயலகத்தின் “அருணோதய” என்ற தொனிப்பொருளின் கீழ் பதுளை மாவட்ட விதாதா பிரிவின் ஊடாக நடைபெற்ற மூன்று மாத கால கணனிப் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் பிரதான நிகழ்வு அண்மையில் பதுளை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது பதுளை, சொரநாத் தொட, பிரிவுகளில் சமயப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தொழில் தேடும் இளைஞர் யுவதிகள் என 80 பேர் இப்பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்ததுடன், இதற்கான வளவாண்மைக்கான பங்களிப்பை … Read more