யாழில் புலம்பெயர் சமூகம் பார்க்க வேண்டிய களங்களை அதிகரிக்க வேண்டும்! தொழிலதிபர் பாஸ்கரன்(Video)

புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்து வரும் மக்களுக்கு யாழில் ஒரு சில இடங்களே பார்வையிடவுள்ளன என்று தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விரிவுரையாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நல்லூர் கோவில், கசூரினா கடற்கரை, றியோ ஐஸ் கிரீம் கடை மற்றும் யாழ்.கோட்டை என்பன புலம்பெயர் மக்கள் பார்க்க கூடிய இடங்களாக உள்ளன. இவற்றை தவிர, யாழில் பார்ப்பதற்கு பெரிதாக எந்த களங்களும் இல்லை. … Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் கையாடல்: 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருட்கள் கையாடப்பட்ட விவகார விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருள்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட பகுதியின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிக்கையிட்டிருந்தாலும், அது 20 இலட்சங்களைக் கடந்திருக்கலாம் எனப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக எமது  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனால் முறையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய பேரவை … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் திடீரென அதிகரிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பயணிகள் நடமாட்டம் சுமார் 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும், விமானப் போக்குவரத்து 7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக்கள் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் காலாண்டு பகுதியை விடவும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விமானப் போக்குவரத்துக்கள் அதிகரித்துள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாளாந்தம் 18,000 பயணிகள், பயணங்களை மேற்கொள்வதாகவும் … Read more

லண்டனில் தமிழருக்கு கிடைத்த வாய்ப்பு…!

லண்டனில் தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்த தமிழர் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த இவர், புலம்பெயர்ந்த இங்கிலாந்து நாட்டில் தமிழ் மொழி, கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். இதேவேளை இவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, தொழிலாளர் கட்சியில் உறுப்பினராக இருந்துள்ளார். சேவைகள் அதன் மூலம் 2018 … Read more

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய மத போதகருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பிய பின்னர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு கையளிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கைது செய்யப்படுவார் எனவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அமலாக்கச் சட்டத்தின் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிய வருகிறது. பல வருடங்களுக்கு முன் பேயவா என்ற பிரபல மருந்து விற்கும் விளம்பரத்தில் நடிகராக தோன்றி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெரோம் … Read more

சிங்கப்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்! தொடரும் மர்மம்

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நேற்று (20.05.2023) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார். குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், வீட்டு உரிமையாளரின் கடும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து பாய்ந்த காணொளியொன்றும் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் பிரேத பரிசோதனை அறிக்கையில், … Read more

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அருகில் 16 பேர் அதிரடியாக கைது

பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் வைத்து போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸ் நிலையம் மற்றும் நுகேகொட பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 20 கிராம் 900 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 80 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 16 பேர் கைது … Read more

தேசிய மட்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்.மாணவர்கள்(Photos)

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள போட்டிகள், யாழ்ப்பாணத்தின் தியகம ராஜபக்ச மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பருத்தித்துறை இந் போட்டியில்,பருத்தித்துறை – ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர். இதில் ஹாட்லிக் கல்லூரி மாணவனான தருண் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.60 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அத்துடன் ஆர்.சஞ்சய் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.91 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை … Read more

ஈரான் படைகள் இஸ்ரேல் வரை…! அமெரிக்காவின் இரகசிய காய் நகர்த்தல் (Video)

1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி ஈரான் மீதான முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்தது ஈராக். மனித அலைகளாக சென்ற ஈராக் படைகள் மிகப்பெரிய அனர்த்ததை ஈரானில் விளைவித்தன. இராசாயண ஆயுதங்களின் பாவனை உலகத்தின் ஆச்சரியக் கண்களை அகல விரிக்கும் படி செய்தது. எண்ணெய் வியாபாரம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருந்த வெறிப்பிடித்த அவா அந்த வளைகுடா யுத்தத்தின் அத்துணை அத்தியாயங்களிளும் பிரதிபலித்து கொண்டே இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய … Read more

கொழும்பில் பிரபல நடிகை வீட்டில் பணியாற்றிய பெண்ணின் மரணத்தில் மர்மம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video)

“கொழும்பில் அமைந்துள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுளை – தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்திற்கு நீதி வேண்டும்” என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்துள்ளார். ஹட்டன் – ப்ரோட்டெக் அலுவலகத்தில் நேற்றைய தினம் (19.05.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்தாவது, “கடந்த 11 ஆம் திகதி தெமோதர பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள பிரபல நடிகையின் … Read more