மதிய உணவு தாமதமானதால் மனைவியைக் கொன்ற கணவன்… சிறைக்குச் செல்ல பயந்து தானும் தற்கொலை!

உத்தரப்பிரதேசத்தில் மதிய உணவு சரியான நேரத்துக்கு அளிக்காததால் மனைவியைக் கணவன் கொலைசெய்துவிட்டு, பின்னர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற அச்சத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, சீதாபூரில் நடந்த இந்த சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரேமா தேவி (28) என்றும், தற்கொலை செய்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர் பெயர் பரசுராம் என்றும் தெரியவந்திருக்கிறது. கொலை முன்னதாக, நேற்று மதியம் வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பரசுராம், மனைவியிடம் உணவு … Read more

விண்வெளி ஆராய்ச்சி மாணவராகத் தயாரா? இஸ்ரோ இன்டர்ன்ஷிப் அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மாணவர்களுக்காக நிறுவனப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) மற்றும் மாணவர் பயிற்சி திட்டங்களை வழங்குகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் நேரடி அனுபவம் பெற இது ஓர் அற்புதமான வாய்ப்பாகும். யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? விண்வெளி இன்டர்ன்ஷிப்: * அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு (UG), முதுநிலை பட்டப்படிப்பு (PG), மற்றும் ஆய்வியல் மாணவர்களாக (PhD) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய குடிமகனாக இருந்து, இந்தியா அல்லது வெளிநாட்டில் … Read more

Alert: யானைகள் நடமாட்டம்; ட்ரோனில் கண்காணிப்பு… வாட்ஸ்-அப்பில் எச்சரிக்கை!

தமிழ்நாடு கேரள எல்லையில் தமிழகர்கள் அதிகம் வாழும் பகுதி மூணாறு. முக்கியமான சுற்றுலா தலமான மூணாறில் தேயிலை தோட்டங்கள் அதிக பரப்பில் உள்ளன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூணாறு Cattle show: காங்கேயம் காளை முதல் தஞ்சாவூர் குட்டை வரை… நாட்டு மாடுகளின் சந்தை..! இந்நிலையில் மூணாறு வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வனவிலங்குகளின் வழித்தடம் மற்றும் குடிநீர் ஆதாரப் பகுதிகள் கம்பி வேலிகளாலும், கட்டிடங்களாலும் அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் … Read more

பரபரக்கும் தேர்தல் ரேஸ்: கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் யார்?!

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை, பொள்ளாச்சி இரண்டு தொகுதிகள் உள்ளன. இங்கு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அண்ணாமலை இதனால் களம் இப்போதே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் விசிட் அடித்து கொண்டிருக்கின்றனர். … Read more

`மீண்டும் சிதம்பரத்தில் போட்டியிடுகிறேன்; ஓ.பி.சி மக்களை பாமக கைவிட்டாலும்…' – திருமாவளவன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முதல் பிரதமர் மோடியின் பிரசாரம் வரை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் இந்தியா கூட்டணி போட்டியிடுகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், வி.சி.க-வுக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மோடி அதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் … Read more

Kanguva Teaser: `சிறப்பு விருந்தினர்!' கங்குவா டீசரில் இடம்பெறும் விஷயங்கள் என்னென்ன?- பரபர அப்டேட்!

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளிவருகிறது என்பதால் தான் அந்த மகிழ்ச்சி. ‘சிறுத்தை’ சிவா, சூர்யா இருவரின் திரைப்பயணத்திலும் மைல் கல்லாக இருக்கும் எனச் சொல்லப்படுகிற ‘கங்குவா’ படத்தின் டீசரை பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ மேக்கிங்கில் மிரட்டலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 10 மொழிகளில் 3D தொழில் நுட்பத்தில் இந்தப் படம் வெளிவருவதால், படத்தின் கிராபிக்ஸ் … Read more

`உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் தேர்தலை நடத்த வேண்டும், ஏனென்றால்..!' – டெரிக் ஓ பிரையன் சொல்வதென்ன?

அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதாகவும், ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், தேர்தல் தேதி பிரதமர் மோடிக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டத் தேர்தல் தமிழ்நாட்டில் திட்டமிடப்பட்டதால்தான் பிரதமர் மோடி அதற்கேற்றவாறு தமிழ்நாட்டு பிரசாரத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகவும். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜக – தேர்தல் ஆணையம் மேலும், பிரதமர் மோடி எல்லா மாநிலங்களுக்கும் பிரசாரத்துக்குச் செல்லும் வகையில் தேர்தலைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி … Read more

`ஆசானுக்கு பத்ம பூஷண் கிடைக்க வேண்டாமா?’- சுரேஷ் கோபியை ஆதரிக்க கதகளி ஆசானை நிர்பந்தித்தாரா டாக்டர்?

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய கதகளி கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை ஆசான்கள் என அழைக்கின்றனர். கதகளியில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கலா மண்டலம் கோபி ஆசான். இந்த நிலையில், கலா மண்டலம் கோபி ஆசானுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆதரவாக செயல்பட அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கலாமண்டலம் கோபி ஆசானின் மகன் ரகுகுரு கிருபா ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு மூலம் தெரியவந்தது.  அந்த … Read more

Purananooru: "படத்திற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது!" – `புறநானூறு' அப்டேட் தந்த சூர்யா

`புறநானூறு’ படம் தொடர்பான அப்டேட்டை நடிகர் சூர்யா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘கங்குவா’ படம்  விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் டீசர் இன்று மாலை வெளியாகிறது. ‘கங்குவா’விற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. சூர்யாவின் 43வது படமான இதில், அவரோடு மிகவும் முக்கியமான கேரக்டர்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா இவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதாக அறிவிப்புகளும் வெளியாகின. சூர்யா, ஜி.வி. பிரகாஷ், சுதா கொங்கரா, … Read more

காங்கிரஸிடம் இருந்து திருச்சியை பெற்ற மதிமுக… வைகோ போடும் கணக்கு என்ன?!

தி.மு.க கூட்டணியில் திருச்சி தொகுதியை பெற்றிருக்கிறது ம.தி.மு.க. அக்கட்சியின் முதன்மை செயலாளார் துரை வைகோ போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ம.தி.மு.க திருச்சி தொகுதியை பெற்றது ஏன்? ம.தி.மு.க-வுக்கான களம் திருச்சியில் எப்படி இருக்கிறது என விசாரித்தோம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இரண்டு தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல் ஆகிய தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு … Read more