Credit Card: கிரெடிட் கார்டு வைத்திருப்போர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

Credit Card: கிரெடிட் கார்டுகள் நமது அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பெரிதும் உதவுகின்றன. இதுபோக பல்வேறு சலுகைகளையும் கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு கார்டிலும் வெவ்வேறு வகையான சலுகைகள் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதுண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு.. கிரெடிட் கார்டு… நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள்? தப்பிக்கும் 3+2 விதிகள்! – மனம் குணம் பணம்! – 4 ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால் சலுகைகள் … Read more

வெளிநாடுகளுடன் கூட்டு… விவசாயிகளுக்கு வேட்டு… சத்தமில்லாமல் ஒப்பந்தம் போட்ட `56 இன்ச்' மோடி!

பெருவாரியான இந்திய விவசாயிகள் மீளாக் கடனிலும், தொடர் தற்கொலையிலும் தள்ளியதற்கு உலக வணிக ஒப்பந்தம் என்கிற மகாகொடூர ஒப்பந்தத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், இதில்கூட சில சிறப்பு ஷரத்துகள் உண்டு, விவசாயிகள் ஓரளவு தப்பிப்பதற்கு. ஆனால், பாரதப் பிரதமர் திருவாளர் நரேந்திர மோடி தற்போது செய்திருக்கும் `வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம்’, உலக மகா கொடூரமானதாக இருக்கிறது.ஒரேயடியாக விவசாயிகளின் குரல்வளையைக் கடித்துக் குதறி, ஒட்டுமொத்தமாகப் பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுக்கக்கூடிய ஒப்பந்தமாகவும் இருக்கிறது என்பதுதான் பேரதிர்ச்சி! இந்த ஒப்பந்தம் … Read more

ஒரே நாடு ஒரே மொழி: `தமிழர்களை தமிழ் பேசாதே என்று எப்படிச் சொல்வீர்கள்?' – மோடிக்கு ராகுல் கேள்வி

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) தொடங்குகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த ஒன்றிணைந்து `இந்தியா கூட்டணி’யாக உருவெடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள், `ஜனநாயகத்தை காப்பற்றுவதற்கான தேர்தல் இது. மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே சட்டம் எனத் திணிப்பார்கள். இஸ்லாமியர்கள் குடியுரிமை பறிக்கப்படும்’ என்று கூறி வருகின்றன. இந்தியா கூட்டணி – மோடி அதற்கேற்றார்போல, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலும் … Read more

இந்தியா இன்னும் வளரவில்லை; இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்க காரணம் இதுதான் ? – ரகுராம்ராஜன் அதிரடி!

அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் “2047-க்குள் இந்தியாவை ஒரு முன்னேறிய பொருளாதாரமாக மாற்றுவதற்கு என்ன தேவை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அதில் அவர் பேசும் போது, “ஜனநாயகத்தின் மையமாக இந்தியா இருக்கிறது. ஆனால் அதன் பயன்களை இந்திய மக்கள் இதுவரை அனுபவிக்கவில்லை. ஜி.டி.பி வளர்ச்சி எண்களையெல்லாம் கருத்திலேயே கொள்ளாதீர்கள். ஏனெனில் நாம் அடைந்திருப்பது 6% ஜி.டிபி வளர்ச்சி. இவ்வளவு பெரிய … Read more

தமிழ்நாட்டில் பிரம்மாண்டம்.. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய டாடா திட்டம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விலை உயர்ந்த ஆடம்பர கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் … Read more

Cooku With Comali 5: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2க்கு நோ; `CWC'க்கு எஸ்! குக்காக சுஜிதா இணைந்ததன் பின்னணி!

விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான `குக்கு வித் கோமாளி’யின் ஐந்தாவது சீசன் மே முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த வாரமே தொடங்கிவிட்ட  நிலையில், இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை தயாரித்து வந்தவர்களிடமிருந்து நிகழ்ச்சி கை மாறியிருப்பதாலும், வெங்கடேஷ் பட் – தாமு கூட்டணி பிரிந்து பட்டுக்குப் பதில் மாதம்பட்டி ரங்கராஜ் இனைந்திருப்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த சீசன். வெங்கடேஷ் பட் தனியாக வேறொரு சேனலின் நிகழ்ச்சிக்கு செல்வதாகத் … Read more

`வண்டியை நிறுத்தமாட்டேன்' – சாலையில் தீப்பறக்க பைக்கை இழுத்துச் சென்ற லாரி டிரைவர்! பதறவைத்த வீடியோ

குடும்பத்துக்குள்கூட ஈகோ இருக்கலாம்; ஆனால் சாலையில் நிச்சயம் இருக்கக் கூடாது. பெட்ரோல் பங்க்கில் இருந்து சிக்னல்கள் வரை வாகன ஓட்டிகளிடம் நடக்கும் ஈகோக்களை நேரில் பார்த்திருக்கலாம்.  இது சில நேரங்களில் வாய் வார்த்தைகளோடு போய் விடலாம். ஆனால் இதுவே பல நேரங்களில் பேரபாயமாக மாறிவிடும். அண்மையில் ஹைதாராபாத் மாநகரில் ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. லாரி டிரைவர் ஒருவர், பைக் ரைடர் மீது கோபமாகி, அவரது பைக்கை நெருப்பு பறக்க சாலையில் பல மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற … Read more

Thug Life: கமல் படத்தில் சிம்பு; மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்த பின்னணி இதுதான்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் `தக் லைஃப்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. `நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கமல், மணிரத்னம் கூட்டணி கைகோத்திருக்கிறது. `தக் லைஃப்’ படப்பிடிப்பு செர்பியாவில் நடந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த ஷெட்யூலில் சிம்பு இணைந்திருக்கிறார். தற்போது அவரது போர்ஷன் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. சிலம்பரசன் ‘தக் லைஃப்’ படத்தில் கமல், சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், … Read more

`Khal Nayak' படத்தின் இரண்டாம் பாகம் ரெடி; யஷ், ரன்வீர், அல்லு அர்ஜுன், ரன்பீரை அணுகும் படக்குழு?!

30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1993ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் `கல்நாயக்’. இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கை தயாரித்து இயக்கியிருந்தார். இன்று ‘கே.ஜி.எஃப்’, ‘லியோ’ படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகிலும் பிரபலமாகியிருக்கும் சஞ்சய் தத் இத்திரைப்படத்தில் நாயகனாக, ‘பல்ராம்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேங்ஸ்டர் திரைப்படமான இது, அந்தச் சமயத்தில் பாலிவுட்டில் பெரியளவில் ஹிட்டடித்தப் படம். குறிப்பாக, ‘சோலி கே பீச்சே க்யா ஹே’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் முணுமுணுக்க வைத்தது. Khal Nayak … Read more

Bade Miyan Chote Miyan: ஆக்‌ஷன் படம்னாலும் ஒரு நியாயம் வேணாங்களா? சோதிக்கும் அக்‌ஷய் குமாரின் படம்!

அக்‌ஷய் குமார், டைகர் செராப், பிரித்விராஜ், சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பில் சயின்ஸ் பிக்‌ஷன் ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது, `படே மியான் சோட்டே மியான்’. இந்திய ராணுவத்தால் பாதுகாக்கப்படும் விவரங்கள் கொண்ட பெட்டியை முகமூடி போட்ட மனிதர் ஒருவர் ராணுவ வீரர்களைத் தாக்கிவிட்டு எடுத்துச் செல்கிறார். இந்த முகமூடி அணிந்தவரைப் பிடிப்பதற்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட இரண்டு ராணுவ வீரர்களை நியமிக்கிறார்கள். இந்த இரண்டு ராணுவ வீரர்கள் அந்த முகமூடி அணிந்த மர்ம நபரைக் கண்டுபிடித்தார்களா, அந்த முகமூடி … Read more