மகளை பென்சிலால் குத்தி கடித்த தாய்- ஆன்லைன் கிளாஸைக் கவனிக்காததால் கொடுமை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காத தனது மகளை தாய் ஒருவர் கொடுமைப்படுத்தியுள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகின்றன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளைக் கவனிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்காத தனது மகளை தாய் ஒருவர் கொடுமைப் படுத்தியுள்ளார். மும்பையை சேர்ந்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தனது மகளை ஆன்லைன் வகுப்பிற்கு தயார் படுத்தியுள்ளார். ஆனால் அந்த சிறுமியோ வகுப்புகளைக் … Read more மகளை பென்சிலால் குத்தி கடித்த தாய்- ஆன்லைன் கிளாஸைக் கவனிக்காததால் கொடுமை!

மேலும் ஒரு அதிபருக்குக் கொரோனா – அதிர்ச்சி தகவல்!

போலந்து நாட்டின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர். கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சில்மிஷம் செய்தவர்களை தட்டிக்கேட்ட மாணவி சுட்டுக்கொலை! – உ.பியில் மேலும் ஒரு கொடூரம்!

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பெண் கொலை சம்பவம் அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத சூழலில் சில்மிஷம் செய்தவர்களை கேள்வி கேட்டதற்காக சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசம் பிரஸோபாத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமியை சிலர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த சிறுமி அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த சிறுமியை … Read more சில்மிஷம் செய்தவர்களை தட்டிக்கேட்ட மாணவி சுட்டுக்கொலை! – உ.பியில் மேலும் ஒரு கொடூரம்!

எதிர்கட்சினா அரசியல் செய்யாம அவியலா செய்யும்? – எடப்பாடியாரை பங்கம் செய்த ஸ்டாலின்!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக ஆளுனர் மாளிகை அருகே திமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுனர் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. தற்போது திமுக தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க கோரி ஆளுனர் … Read more எதிர்கட்சினா அரசியல் செய்யாம அவியலா செய்யும்? – எடப்பாடியாரை பங்கம் செய்த ஸ்டாலின்!

மின்சார வாரியத்தின் இணையதளம் மாற்றம்! புதிய முகவரி உள்ளே!

தமிழக மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மின்சார பில்களை மின்சார வாரியத்தின் இணையதளம் மூலமாகவே நேரடியாக செலுத்தலாம். அதற்கான முகவரிகளாக www.tangedco.gov.in www.tantransco.gov.in www.tnebltd.gov.in ஆகியவை செயல்பட்டு வந்தன. இந்நிலையில் மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய முகவரிகளாக www.tangedco.org www.tantransco.org www.tnebltd.org ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு !

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நாளை பெண்களை இழிவாக பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more வி.சி.க தலைவர் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு !

மதுரை பட்டாசு ஆலையில் விபத்து – 5 பேர் பலி!

மதுரை அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட செங்குளம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த சண்முகராஜன்என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதை ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வெடி தயாரிப்பின் போது மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வால் விபத்து நடந்துள்ளது. இதில் ஆலையின் மூன்று அறைகள் முற்றிலுமாக உடைந்து சேதமாகின. விபத்தின் போது பட்டாசு தயாரிக்கும் … Read more மதுரை பட்டாசு ஆலையில் விபத்து – 5 பேர் பலி!

சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள்: 26 முதல் முன்பதிவு தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து போக்குவரத்தும் படிப்படியாக தொடங்கி வருகின்றன. ஏற்கனவே பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கியதை அடுத்து விரைவில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில சிறப்பு ரயில்கள் குறித்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே … Read more சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள்: 26 முதல் முன்பதிவு தொடக்கம்