எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம… மறுபரிசீலனை செய்வது நல்லது – அமைச்சர் கடம்பூர் ராஜு!

எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு … Read more எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம… மறுபரிசீலனை செய்வது நல்லது – அமைச்சர் கடம்பூர் ராஜு!

நான்தாண்டா இனிமேலு.. வந்து நின்னா தர்பாரு! – 2035 வரை ஜின்பிங்தான் அதிபர்!

தற்போது சீன அதிபராக பதவி வகித்து வரும் ஜீ ஜின்பிங்கை மேலும் 15 ஆண்டுகளுக்கு அதிபராக இருக்க செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய உலகளாவிய சூழலில் சீனாவின் முடிவுகள் அமெரிக்காவிற்கும், சீனாவின் அண்டை நாடுகளுக்கும் பெரும் பிரச்சினைகளை அளித்து வருகின்றது. தைவான், இந்தியாவுடன் எல்லைகளில் பிரச்சினை, அமெரிக்காவுடன் வர்த்தகரீதியான போர் என சீனாவின் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு விழா நடைபெற்றது. … Read more நான்தாண்டா இனிமேலு.. வந்து நின்னா தர்பாரு! – 2035 வரை ஜின்பிங்தான் அதிபர்!

பிரான்ஸ் நீஸ் தேவாலய தாக்குதல்: “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” – அதிபர் மக்ரோங்

பிரான்ஸின் நீஸ் நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணை கத்தியால் குத்தி கொன்றவர் இரு தினங்களுக்கு முன் துனிஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸாரால் சுடப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.   பிரான்ஸின் நீஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.   இது ஒரு “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் பள்ளிகள், … Read more பிரான்ஸ் நீஸ் தேவாலய தாக்குதல்: “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” – அதிபர் மக்ரோங்

நீங்க வேணாம்னாலும் நாங்க விட மாட்டோம்! – ரஜினி வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்!

நடிகர் ரஜினி உடல்நல குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ரஜினி வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி வெளியிட்டுள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவியது. அதில் ரஜினி தனக்கு ஏற்கனவே இரண்டு முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனா உள்ள நிலையில் கட்சி தொடங்குதல், பொதுக்கூட்டம் என சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனக்கு மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் … Read more நீங்க வேணாம்னாலும் நாங்க விட மாட்டோம்! – ரஜினி வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்!

வாட்ஸ் ஆப் மூலமாக சரக்கு டோர் டெலிவரி செய்த நபர் – மதுரையில் கைது!

மதுரை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக சரக்குகளை டோர் டெலிவரி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாவட்டங்களில் கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு சரக்கு பாட்டில்கள் விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தங்கராமன் என்பவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினால் வீடு தேடி பாட்டில் … Read more வாட்ஸ் ஆப் மூலமாக சரக்கு டோர் டெலிவரி செய்த நபர் – மதுரையில் கைது!

உலக கொரோனா பாதிப்பு: 4.53 கோடியாக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.53 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 45,319,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,186,198 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 32,990,676 பேர் … Read more உலக கொரோனா பாதிப்பு: 4.53 கோடியாக உயர்வு!

காஷ்மீர் இல்லாத வரைபடம் – செளதியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இந்த ஆண்டு தலைமை தாங்கும் செளதி அரேபியா, அந்நிகழ்வையொட்டி வெளியிட்ட விளம்பரம் மற்றும் புதிய செளதி கரன்சியில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருப்பதற்கு, தனது கடுமையான எதிர்ப்பை இந்தியா பதிவு செய்துள்ளது. செளதி தலைநகர் ரியாத்தில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு வரும் நவம்பர் 21,22 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்நாட்டில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய வல்லரசுகள் கலந்து கொள்ளும் இந்த உச்சி மாநாட்டையொட்டி … Read more காஷ்மீர் இல்லாத வரைபடம் – செளதியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா

கொரோனா வைரஸ்: அச்சுறுத்தும் இரண்டாம் அலை – பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதால் அந்த நாடுகள் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை அமல்படுத்துகின்றன. பிரான்ஸில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசியப் பணிகள் மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே ஆட்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல  அனுமதிக்கப்படுவர்.   இது தொடர்பாகப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங், கொரோனா வைரஸின் முதல் அலையை விட மோசமான இரண்டாவது அலை நாட்டைத் தாக்கும் இடர்பாடு இருப்பதாகத் தெரிவித்தார். … Read more கொரோனா வைரஸ்: அச்சுறுத்தும் இரண்டாம் அலை – பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

6 மாத காலமாக ஒரு கொரோனா தொற்று கூட இல்லையாம் – சாதித்துக் காட்டிய தைவான்!

உலகமே கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் போது ஒரு நாடு மட்டும் அதை சிறப்பாகக் கையாண்டு உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற முன்னேறிய நாடுகளையெ கொரோனா ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. ஆனால் ஒரு குட்டி நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அந்த நாடு தைவான்தான். இதுவரை வெறும் 533 பேர் மட்டுமே அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பின்னர் இதுவரை ஒரு கொரோனா தொற்றுக் கூட … Read more 6 மாத காலமாக ஒரு கொரோனா தொற்று கூட இல்லையாம் – சாதித்துக் காட்டிய தைவான்!

பிரிவினையின் விதைகளை விதைக்க அமெரிக்கா முயற்சி!

இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு விசயங்களில் நான்கு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த வழிகளை கண்டுபிடிப்போம் என்று கூறியதோடு, இந்த நாடுகளுடனான பேச்சுவார்த்தையின் போது, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த 4 நாடுகளுக்கும் சீனா உண்மையில் தீங்கு விளைவித்துள்ளதா இல்லையா என்பதை … Read more பிரிவினையின் விதைகளை விதைக்க அமெரிக்கா முயற்சி!