மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் வடமாகாணசபைக்கு நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் 4 பேருக்கான நியமனங்கள் கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் வழங்கப்பட்டது .  

திருகோணமலையில் வீசிய மினி சூறாவளி – 11 வீடுகள் சேதம்!

திருகோணமலை – பம்மதவாச்சி பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் பதினொரு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் மானிய அடிப்படையில் மட்டுமல்லாது கடன் அடிப்படையில் வழங்கிய கடன்களை பெற்று வீடுகளை நிர்மாணித்து வந்தவேளை இயற்கை அனர்த்தத்தில் தமது வீடுகள் சேதமடைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீண்ட நாட்களுக்கு பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்த போது தாங்கள் சந்தோஷமாக இருந்ததாகவும் ,எனினும் இந்த மினி சூறாவளியால் வீடுகள் சேதமாக்கப்பட்டமை மிகவும் கவலையளிப்பதாகவும் … Read moreதிருகோணமலையில் வீசிய மினி சூறாவளி – 11 வீடுகள் சேதம்!

ஜப்பான் இலங்கைக்கு 1.6 பில்லியன் ரூபா மானியம்

மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான பணிகளுக்காக ஜப்பான அரசாங்கம் இலங்கைக்கு நிதி உதவியினை வழங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் நாட்டுக்குள் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த சுற்றுலாத் தொழிற்துறைக்கு பாரிய அளவில் எதிர் மறையான தாக்கம் பொருளாதாரத்துக்க ஏற்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதற்கு உடனடி பெறுபேறாக ஜப்பான் அரசாங்கத்தினால் 1 பில்லியன் ஜப்பான் யென்களை அதாவது 1.6 பில்லியன் ரூபாவை திட்டமில்லாத நன்கொடையாக இலங்கை பொலிஸ் … Read moreஜப்பான் இலங்கைக்கு 1.6 பில்லியன் ரூபா மானியம்

பிரசவத்தின் பின்னர் நாவலப்பிட்டிய மருத்துவமனையிலிருந்து மாயமான தாய்!

வயிறு வலி காரணமாக கடந்த மாதம் 31 ஆம் திகதி நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது அவர் குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இம்மாதம் முதலாம் திகதி சத்திர சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்றை குறித்த பெண் பிரசவித்துள்ளார். இந்நிலையில் பிரசவத்தின் பின்னர் சிசு மோசமான உடல் ஆரோக்கியத்தில் இருந்த காரணத்தால் நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசு … Read moreபிரசவத்தின் பின்னர் நாவலப்பிட்டிய மருத்துவமனையிலிருந்து மாயமான தாய்!

“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படி இல்லை” – இலங்கை அரசு தொலைக்காட்சி மீது நடவடிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளார் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 1982ஆம் ஆண்டு 6ஆம் இலக்க சட்டத்தின் … Read more“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படி இல்லை” – இலங்கை அரசு தொலைக்காட்சி மீது நடவடிக்கை

வடக்கு கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கும் தீர்ப்பின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த மாகாணங்களின் தற்போதைய நிலை பற்றி திருப்தியடைய முடியாது என்றும் அமைச்சர் கூறினார். கிளிநொச்சிப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்கு கிராமங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

100 மி.மீ அளவான பலத்த மழை

அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் … Read more100 மி.மீ அளவான பலத்த மழை

இராணுவ தளபதி பேராயரை சந்திப்பு

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இம் மாதம் (10) ஆம் திகதி பகல் கொழும்பு 8 இல் அமைந்துள்ள பேராயர் வாசஸ்தலத்தில் பேராயர் கலாநிதி மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையை சந்தித்தார். பேராயர் வாசஸ்தலத்திற்கு சென்ற இராணுவ தளபதியை பேராயரது தனிப்பட்ட உதவியாளர் கலாநிதி ஐவன் விதானகே, இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன நுழைவாயிலில் வைத்து வரவேற்றனர். பின்னர் இராணுவ தளபதியவர்கள் பேராயரை சந்தித்து கலந்துரையாடலை … Read moreஇராணுவ தளபதி பேராயரை சந்திப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் உதவிய காத்தான்குடி வர்த்தகர் விளக்க மறியலில்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை பேணினார் என குற்றச்சாட்டப்பட்ட, 30 வயதான மட்டக்களப்பு காத்தான்குடியைச் அஹமது மொஹமட் அர்சாத் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, கொட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ரங்க திஸாநாயக்கவின் முன்னிலையில், நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடத்தப்பட்ட … Read moreஐ.எஸ்.ஐ.எஸ் உதவிய காத்தான்குடி வர்த்தகர் விளக்க மறியலில்!