2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி..

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்… இருநூற்றுப்பத்து (210) இயைபு முறைக் குறியீடுகளின் (HS Code) கீழ் வகைப்படுத்தல்களுக்கான 64 பொருட்களை இறக்குமதி செய்யும் போது வசதியளிப்பதற்காக தனிக்கூட்டு வரி அறவீட்டுக்காக 2007 ஆம் ஆண்டின் … Read more

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500/- ஆக விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் … Read more

தேங்காய் தண்ணீர்  ஏற்றுமதியினால் பெப்ரவரி மாதத்தில் 3,439 மில்லியன் ரூபா வருமானம்

நாட்டில் தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியினால் 2024 பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 3,439 மில்லியன் ரூபா வருமானம்  கிடைக்கப்பெற்றுள்ளது.   தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் பிரகாரம் கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில்  தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியினால் 2,705மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 734 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தில் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்தார். விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் … Read more

சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் நடாத்துகின்ற சர்வதேச மாநாடு இவ்வாண்டு இலங்கையில்

சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை இவ்வாண்டு (2024) இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு  அமைவாக இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக  நேற்று (25.03.2024) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:05. சர்வதேச மிளகு உற்பத்தி சமூகங்கள் ஆண்டுதோறும் நடாத்துகின்ற சர்வதேச மாநாட்டை 2024 இல் இலங்கையில் நடாத்துதல் உலகில் மிளகு உற்பத்தி செய்கின்ற பிரதான நாடுகள் இணைந்து … Read more

IMF உடன்படிக்கையை மாற்ற முயற்சித்தால் சர்வதேச நாடுகள் கடன் கடிதத்தை ஏற்க மறுக்கும்

ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்துடனான நிரந்தர கடன் உடன்படிக்கையை மாற்றுவதற்கோ அல்லது திருத்துவதற்கோ முற்பட்டால், அந்நாடுகள் முன்வைக்கும் கடன் கடிதத்தை சர்வதேச நாடுகள ஏற்க மறுக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான நிரந்தர கடன் உடன்படிக்கையை மாற்றுவதாகவோ அல்லது திருத்துவதாகவோ எவரேனும் கூறினால், அவரால்; இரண்டு வாரங்கள் கூட இலங்கையில் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க … Read more

கொள்கை வட்டி வீதங்களில் மேலும் குறைவு  – இலங்கை மத்திய வங்கி 

இலங்கை ஈத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.50 சதவீதத்திற்கும் 9.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது.  2024 மார்ச் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் இவ்வாறு  தீமானம் மேற்கொள்ளப்பட்டது.  நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடைவதை இயலச் செய்வதற்கு தற்போதைய மற்றும் … Read more

கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிப் பாடநெறி மற்றும் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

ஒறுகொடவத்த இலங்கை – கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் வழங்கப்பட்ட 2,900 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன், இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பாடநெறிகள் மற்றும் நிறுவனத்தில் காணப்படும் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிப்பை வழங்குவதற்கு கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. மேலும், 16 மாதகாலம் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் கீழ், மோட்டார் வாகன தொழிநுட்பம், உற்பத்தித் தொழிநுட்பம் – CNC, உருக்கு ஒட்டுத் தொழிநுட்பம், … Read more

இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் அதிமேதகு Dewi Gustina Tobing நேற்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது. மேலும், இராணுவப் பயிற்சி மூலோபாய கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட … Read more

T20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா பயணம்

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை மகளிர் அணியினர் கடந்த 23ஆம் திகதி தென் ஆபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளனர். சமரி அத்தபத்து தலைமையிலான இந்த அணியில் 17 வீராங்கணைகள் உள்ளனர். தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணிக்கு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அனுமதியை வழங்கினார். இந்த போட்டியில் மூன்றுT20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கும். இங்கு நடைபெறும் … Read more

தேர்தல் திருத்தங்கள் மூலம் எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது..

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 1994ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதாகவும் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழலை கட்டுப்படுத்துவதற்கும் விகிதாசார தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே … Read more