கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 25 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 25 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியும் காணப்படுகின்றது. … Read more

இரண்டு மில்லியன் மக்களுக்கு இலவச காணி உரிமை வழங்கும் “உறுயம” வேலைத்திட்டத்தை ஜூன் மாதமளவில் நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு

• எந்த இனத்தவராக இருந்தாலும் அனைத்து பிரஜைகளுக்கும் சட்டரீதியான காணி உரிமை கிடைக்க வேண்டும். • வடக்கின் விவசாயத்தில் நவோதயம். • வடக்கில் நாட்டில் பிரதான பொருளாதாரத்தை கட்டமைக்க ஒன்றுபட்டுச் செயற்படுவோம் – ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு. காணி உரிமை வழங்கும் “உறுமய தேசிய வேலைத்திட்டத்தை” ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எந்த இனத்தவராக இருந்தாலும் சட்டரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து … Read more

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

• வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகையை வழங்க ஏற்பாடு. • ஏப்ரல் 03 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான ஒன்றியம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். … Read more

நமது நாட்டில் சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி

நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் நேற்று (23) நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் “தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு” என்ற தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு நேற்று (23) பொலன்னறுவையில் … Read more

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்

• சிறந்த எதிர்காலத்திற்கான வழி எதுவென இளைஞர் சமூகம் தான் தெரிவு செய்ய வேண்டும். • சில அரசியல்வாதிகள் தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் போது நான் நாட்டை பற்றியே சிந்தித்தேன் – “யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம்” உடனான சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு … Read more

நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்தி பொருளாதார முன்னேற்றத்திற்காக அதனை வலுவாக பயன்படுத்திகொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும்

• ​செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை சுகாதார துறையில் உள்வாங்க வேண்டும். • பருத்தித்துறை வைத்தியசாலையின் அவசர விபத்து – சிகிச்சை பிரிவை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து ஜனாதிபதி உரை. • நெதர்லாந்து அரசாங்கத்தின் 04 பில்லியன் ரூபாய் கடன் உதவியில் பருத்தித்துறை வைத்தியசாலை அபிவிருத்தி. இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் … Read more

இலங்கை பிரதமரை சந்தித்த மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்!

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.  இந்த சந்திப்பில் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.  அதேபோன்று டட்டுக் சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள்   மலேசியாவில் பணிப்புறிவதற்கான  10ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார். அதற்காக பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண … Read more

இலங்கைக்கு மேலும் நிதியுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்… – பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது நாட்டிற்கு கிடைத்த வெற்றி… நேற்று முன் தினம் (2024.03.22) அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், ஆறு மாடிகளைக் கொண்ட இந்த புதிய சத்திர சிகிச்சை பிரிவு வளாகத்தில் 600 படுக்கைகள் மற்றும் 8 நவீன சத்திர சிகிச்சை கூடங்கள் இருக்கும். கொழும்பு, … Read more

சர்வதேச நீர் தின விழா

“சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான சர்வதேச நீர் தின விழா இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில் (22.03.2024) நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில்  இடம்பெற்றது. நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் எஸ்.டீ. தர்மரத்ன சிறப்புரையாற்றினார். உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடாளவீய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப் 2024 மார்ச்  22 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more