இலங்கையில் இந்து ஆலயங்களில் புதியதாக முளைக்கும் புத்தர் சிலைகள்…வெளியான பல ரகசியங்கள்

இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான … Read moreஇலங்கையில் இந்து ஆலயங்களில் புதியதாக முளைக்கும் புத்தர் சிலைகள்…வெளியான பல ரகசியங்கள்

வறட்சி நிலவிய மாவட்டங்களின் நுண் கடன் பெற்ற 45, 139 பேரின் கடன் தள்ளுபடி

தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சமுகத்தை வலுப்படுத்துதல் மற்றும் வறுமைக்கு உட்பட்டவர்களை பாதுகாக்கும் வரவு செலவுத்திட்டம் இம்முறை சமர்பிக்கப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   நுண்நிதி கடனை தள்ளுபடி செய்ய தீர்மானத்தை மேற்கொண்டோம். வறட்சி நிலவிய மாவட்டங்களில் இந்த கடனைப் பெற்ற 45, 139 பேர் விடிவிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் இந்த நிதியை செலுத்தும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இன்று … Read moreவறட்சி நிலவிய மாவட்டங்களின் நுண் கடன் பெற்ற 45, 139 பேரின் கடன் தள்ளுபடி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்பொழுது அரசின் பாதீட்டை பாதிக்கும் நிலைவரை உச்சமடைந்திருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு தொடர்பான நிலைப்பாடு இதுவரை பகிரங்கமாக வெளிவராத நிலையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) பொதுக் குழு, பிரதேச செயலக விவகாரம் மற்றும் ஜெனிவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை என்பவற்றை முன்னிறுத்தி தமது உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பர் என்கின்ற முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கல்முனை வடக்கு … Read moreகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்

சிரமங்களை எதிர்கொண்டிருந்த குவைட் பணியாளர்கள் நாடு திரும்பல்

குவைட் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளான 16 பெண்களும் 2 ஆண்களும் மொத்தம் 18 பேர் இன்று காலை நாடு திரும்பினர். இலங்கை வெளிநாட்டு வேலை பணியகமும் குவைட் நாட்டிலுள்ள இலங்கை தூதரங்கமும் இணைந்து இவர்களை இலங்கைக்கு திரும்ப நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இவர்கள் இன்று காலை 6.15 மணிக்கு கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தனர்.

மன்னார் – வவுனியா உட்பட மூன்று மாவட்டங்களிற்கு கடும் எச்சரிக்கை

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் மன்னார், வவுனியா மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய வெப்ப காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நீர்ப்போக்கு, அதிக களைப்புடன் பக்கவாத நிலைமையும் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே போதுமான நீரை அருந்துமாறும் நிழலான பகுதிகளில் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மொனராகலை மாவட்டங்களுக்கு இழப்பீடு

மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் சேனாப் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன. சேனாப் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட சோள உற்பத்திக்கு நட்டஈடு வழங்குவதற்கென 25 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேவைக்கு அமைய இத்தொகையை மேலும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக விவசாய காப்புறுதிச் சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுல வீரசிங்ஹ மேலும் குறிப்பிட்டார். இதே வேளை சேனாப் படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட சோளப் பயிர்ச் செய்கை உற்பத்தியாளர்களுக்கு … Read moreசேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மொனராகலை மாவட்டங்களுக்கு இழப்பீடு

கட்டுநாயக்கவில் 2கோடி ரூபாய் பெறுமதியான பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோத தங்க ஆபரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, 4 கிலோ 43 கிராம் எடை கொண்ட 423 தங்க வளையல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் 2கோடி 15 இலட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் புத்தமயமாகும் இராஜசிங்க மன்னனின் இந்து ஆலயம்…

இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் … Read moreஇலங்கையில் புத்தமயமாகும் இராஜசிங்க மன்னனின் இந்து ஆலயம்…

வட , கிழக்கு மாகாணங்களில் 6 வெளிச்ச வீடுகள் புனரமைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 6 வெளிச்ச வீடுகள் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதிக்கு முன்னர் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு வெளிச்சவீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனைப் புதிதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டார்.

மைத்திரியின் கண்டிப்பான உத்தரவு! அடுத்தடுத்து என்ன நடக்கும்??

ஐ.நா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் தன்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. தீர்மானம் குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் வழங்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஏற்கனவே இலங்கை … Read moreமைத்திரியின் கண்டிப்பான உத்தரவு! அடுத்தடுத்து என்ன நடக்கும்??