தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க (06) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த பால் மா பக்கட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு தலா … Read more

7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அவுஸ்திரேலியா விஜயம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது. இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் … Read more

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித்தொகை ஜனவரி முதல் உயர்த்தப்படுகிறது

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, 7,500 ரூபாவாகவும், 2,000 ரூபாவாக இருந்த முதியோர் உதவித்தொகை, 3,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது அஸ்வெசும நிவாரணம் பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள்; இந்த ஆண்டின் முதல் காலாண்டில் … Read more

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் தொடர்ந்தும் வட்டியில்லாக் கடன் வசதி – கல்வி அமைச்சர்  

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும்  வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அதற்காக அமைச்சரவை தற்போது தயாராகி வருவதாகவும், காணப்படும் அதற்கான வேலைகள் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் … Read more

ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக ஜகத் பிரியங்கர இன்று (08) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய புத்தளம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் நிஷாந்தவின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் பிரியங்கர இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். 1979 இல் பிறந்த … Read more

நாடு பூராகவும் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள்

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில் பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் மாவட்ட பாவனையாளர் … Read more

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலுடன் தொழிற்சந்தை

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நேற்று (07) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. “76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குதல்” என்ற தொனிப்பொருளில் இவ்வேலைத்திட்டமானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் பி.ஆர்.சுமித்கொட்டின்கடுவ, தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரனி, இளைஞர் … Read more

நாடு முழுவதும் சீரான வானிலை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 இல் தேர்தல்களை நடாத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இவ்வாண்டில் தேர்தல்களை நடத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பாக தொடர்ந்தும் குறிப்பிடுகையில்; 2024ஆம் ஆண்டில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக மாத்திரம் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விசாரணை … Read more

புனரமைக்கப்பட்ட ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை ” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ (05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, தனித்துவ மையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். இதன் கீழ் நீர் சிகிச்சைப் பிரிவு மற்றும் விளையாட்டு காயங்களை … Read more