குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் எக்கச்சக்கமான வெளிநாட்டுப்பறவைகள் – காணப் படையெடுக்கும் மக்கள்!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் வருடாந்தம் தஞ்சமடையும் வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய பகுதியில் சில மாதங்கள் தங்கியிருக்கும் இப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சிபொரித்ததும் தனது தாயகம் நோக்கி மீண்டும் திரும்பும் என சொல்லப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் சில தீவுப்பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தாண்டி பறந்துவரும் இப் பறவைகள் டிசம்பர் மாதப்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை இங்கு தங்கியிருப்பதாக சூழலியலாளர்களால் தெரிவிக்கின்றனர். இப் பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடுகளை கட்டி … Read more

இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது – பாடசாலை மாணவர்கள் வெளிக்கள வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்

இன்றும் நாளையும் (பெப்ரவரி 29 மற்றும் மார்ச் 01) சுற்றுச்சூழலில் நிலவும் அதிக வெப்ப நிலை மேலும் அதிகரிக்க கூடும் என கிடைக்கப் பெற்றுள்ள தகவலின்படி, நாட்டிலுள்ள எந்தவொரு பாடசாலை மாணவர்களும் வெளிப்புற விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகளிலோ அல்லது விளையாட்டு நிகழ்வுகளிலோ அல்லது  எந்தவொரு வெளிக்கள செயற்பாடுகளிலுமோ பங்குபற்றுவதை தவிர்க்குமாறு சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கும் வகையில் ஏற்கனவே மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு உரிய … Read more

இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாட்டில் இலங்கை அர்பணிப்புடன் இருக்கும் 

அதிகார மோதல்கள் இன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்துச் செயற்பாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நிலைப்பாடுகளை பேணுவதில் இலங்கை அர்பணிப்புடன் இருக்குமென இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடல்சார் செயற்பாடுகளின் சுதந்திரத்திற்காக இலங்கை அர்பணிப்புடன் இருப்பதாலேயே செங்கடல் பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை முன்வந்திருப்பதாகவும், ஆறு நாள் யுத்தத்தின் விளைவாக சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் அறிவுறுத்தினார். அதனால் வரையறைகள் அற்ற … Read more

தேசிய இப்தார் நிகழ்விற்கு செலவிடப்படும் பணம் காஸா மோதலினால் இடம்பெயர்ந்த குழந்தைகளின் சுகாதார நலனுக்காக வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும் தொகையை இந்த நிதியத்திற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இதற்காக மக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய … Read more

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டை வளாகத்தில் இடம்பெற்றது. கற்புலக் கலைத்துறை விரிவுரையாளரான ஏ. எல். அஸ்மர் ஆதமின் வழிகாட்டுதலின் கீழ், கற்புலக் கலைத் தொழில் நுட்பத்துறையில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்கும் சுமார் 70 மாணவ மாணவிகள் தமது 2ஆம் கல்வித் தவணைக்கான வெளிக்கள ஓவியச் செயற்பாடுகள் என்ற பாடத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் … Read more

நாடு இருந்ததை விட சிறந்த நிலையில் உள்ளது – எதிர்காலத்தில் மேலும் சிறந்து விளங்க நாம் பாடுபடுவோம்

நமது நாட்டின் நிலமை இருந்ததை விட சிறந்து விளங்குவதாகவும், எதிர்கால நிலமைகளை மேலும் சிறப்படையச் செய்வதற்காக நாம் கடினமாக பாடுபட இந்த விடயம் பேசுவதற்கு இலகுவானது வேண்டும் என்றும்; அமைச்சரவைப் பேச்சாளருமான வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை வழங்குவதற்கு போதுமான … Read more

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் திருமதி கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சபாநாயகர் கௌரவ மஹிந்த யப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றப் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்ய யாழ் பல்கலைக்கழ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

இலங்கை பாராளுமன்றத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் (15) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விரிவான புரிதலை வழங்கும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவினால் இந்தப் பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் … Read more

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்றத்திடம் கையளித்தார் கௌரவ உத்திக பிரேமரத்ன

அநுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அவர்களிடம் (27) கையளித்துள்ளார். அதற்கமைய, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உத்திக பிரேமரத்ன அவர்களின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு … Read more

முல்லைத்தீவு மாவட்ட மக்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட கலந்துரையாடல்

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், நன்னீர் மீன்பிடியாளர்கள், கரையோர ஆழ்கடல் மீனவர்கள் முதலானோர் மற்றும் திருமுறுகண்டி ஆலய அபிவிருத்தி தொடர்பிலும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.   இதில் குறிப்பாக சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் … Read more