மீண்டும் 28இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்  – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ

இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டம் இம்முறையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அதற்காக இதுவரை எவ்வித நிவாரண வேலைத் திட்டத்திலும் பங்குபற்றாத நபர்களை உள்ளடக்கியதாகவும் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மிகிந்தலை, விளச்சிய, நாச்சியாதுவ உட்பட பல பிரதேசங்களில் அபிவிருத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதற்கிணங்க தற்போது அஸ்வெசும பெறும் மற்றும் அதற்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கும், … Read more

பொலன்னறுவையில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் 650மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிடிய பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மாவட்ட மட்டத்தில் பால் தயாரிக்கும் மத்திய நிலையத்தை நிருமாணிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பிரதேசத்திற்கான பால் தயாரிக்கும் 6 மத்திய நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்;கை எடுத்துள்ளதுடன் அதன் மூன்றாம் நிலையம் திறக்கும் வைபவம் அண்மையில்  இடம்பெற்றது. தமன்கடுவ பிரதேசத்தின் 8000 பால் உற்பத்தியாளர்களின் … Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் நாட்டின் தலைமைப் பதவிக்கு வந்தேன்

• கட்சியை பிளவுபடுத்தி உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியில் வெறுப்பு மட்டுமே உள்ளது. • அன்றும் இன்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்காகும் – கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பாரம்பரியத்துடன் … Read more

மே மாதம் முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும். தெரிவு … Read more

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் – வட மாகாண ஆளுநர் 

2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்துள்ளதாக வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான   சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்விலேயே ஆளுநர் இதனை தெரிவித்தார்.  எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.  … Read more

செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் இலுப்படிச்சேனையில்    உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (07) திறந்து வைத்தார். இதன் போது மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும்  நிலையம்  திறந்து வைப்பு!

மட்டக்காப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு   வே லைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க மாதுளம் பழங்களை  சேகரித்து பதப்படுத்தும் நிலையம் ஏறாவூர் பற்று  செங்கலடி  பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் (05) திறந்து வைக்கப்பட்டது. இதன் போது விவசாயிகளின்  மாதுளம் பழ விளைச்சலை அதிகரிப்பதற்காக, விவசாயச் சங்கங்கள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் ஆளுநரினால் கையளிக்கப்பட்டன . இந்நிகழ்வில்  வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். … Read more

நண்பகல் 12.12 அளவில் கடவத்த, பதுள்ளை, லுனுகல, கோன்கஸ்பிட்டிய, பக்மிடியாவ, மற்றும் கொத்மலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 07ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி … Read more

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

தேசிய புத்தரிசி விழா நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது. பாரம்பரியமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகம ஹேமரதன தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று … Read more

இலங்கைக்கான பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்தது

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகிய பகுதிகளில் முந்தைய தகவல்களைப் புதுப்பித்துள்ளது. அதன்படி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு குறித்து முந்தைய ஆலோசனையில் … Read more