ரூ.51,000: உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு, மருமகனுக்கே மகளை மணமுடித்த பெற்றோர் – உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் திருமண உதவித்தொகையாக `விவஹேது’ என்ற திட்டத்தின் மூலம் ரூ.51,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.35,000 நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கும், சீர்வரிசைக்காக ரூ.10,000, மண விழாவிற்காக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பல்லியா மாவட்டத்தில் 200 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் அதில் ஏற்கெனவே திருமணமானவர்கள், பணத்துக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்டது, போலியாக திருமணம் செய்துகொண்டது, சம்பந்தமில்லாதவரைக்கூட ஒப்பந்த அடிப்படையில் மணமகளாக, மணமகனாக அழைத்துவரப்பட்டது என பல்வேறு மோசடிகள் நடந்தன. … Read more

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 86.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.   இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாகப் பயணம் செய்துள்ளனர்.  இந்த … Read more

“மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் நிவாரணம் கிடைத்திருக்கும்” என்ற எடப்பாடியின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அழுத்தம் கொடுப்பது என்று ‘பாதம்தாங்கி’ பழனிசாமி சொல்வது மோடியின் காலுக்கு அழுத்தம் கொடுப்பதையா… அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தாங்கள் செய்த ஊழல்களை மறைக்க ஒன்றிய பா.ஜ.க அரசு சொன்ன அனைத்தையும் கைகட்டி, வாய் பொத்தி கேட்டுச் செய்தவர்கள் தானே பழனிசாமி உள்ளிட்ட அடிமைகள்… அவர்களுக்கு தி.மு.க குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. தமிழ்நாட்டுக்கு உரிய வரிப் பங்கீட்டையும், நியாயமாகக் கிடைக்கவேண்டிய நிவாரணத்தையும் நாங்கள் கேட்கிறோம். தர மறுத்த … Read more

பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான்… முதல்வர் சித்தராமையா தகவல்..

பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா தகவல் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் வெடிகுண்டு வெடித்தது. மதிய நேரம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முதலில் ஹோட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் சக்தி வாய்ந்த … Read more

Congress leaders are furious with the caste census report! Sivasankarappa is unhappy that he made it sitting at home | ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையால் காங்., தலைவர்கள்… ஆவேசம்! வீட்டில் அமர்ந்து தயாரித்ததாக சிவசங்கரப்பா அதிருப்தி

பெங்களூரு : பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் தாக்கல் செய்த, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, ஆளும் காங்கிரஸ் கட்சியில் சூறாவளியை கிளப்பியுள்ளது. “வீட்டில் அமர்ந்து தயாரித்த அறிக்கையை தாக்கல் செய்தால், மவுனமாக இருக்கமாட்டோம்,” என, அக்கட்சியின் மூத்த தலைவர் சிவசங்கரப்பா ஆவேசமாக எச்சரித்துள்ளார். கர்நாடகாவில், 2013ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டார். இந்த பொறுப்பை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்திடம் ஒப்படைத்தார். ஆணையத்தின் அன்றைய தலைவர் காந்தராஜு ஆய்வில் ஈடுபட்டார். மக்களை சந்தித்து … Read more

பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்யத் தடை: தமிழக அமைச்சர் உத்தரவு

சென்னை தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தடை விதித்துள்ளார்.  இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு … Read more

Siddaramaiah appeals to increase organ donation | உடல் உறுப்பு தானம் அதிகரிக்க சித்தராமையா வேண்டுகோள்

பெங்களூரு : ”உயிர் பறிபோகும் போது, மற்றொருவரின் உயிரை காப்பாற்ற நினைப்பது சாதாரண விஷயமல்ல. உடல் உறுப்பு தானம் அதிகரிக்க வேண்டும்,” என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு, சுகாதார துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, முதல்வரின் அரசு இல்லமான காவேரியில் நேற்று நடந்தது. பாராட்டு சான்றிதழ் வழங்கி முதல்வர் சித்தராமையா பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில், நாட்டிலேயே கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. தானம் செய்பவரின் குடும்பம் சந்திக்கும் … Read more

இன்று மம்தா பானர்ஜி மோடியைச் சந்திக்கிறார்.

கொல்கத்தா இன்று இரவு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர், ஹுக்ளி மற்றும் நாடியா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். மேலும் பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இன்று இரவு பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாகத் … Read more