500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரண்ட அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி…

ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலையில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரளும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமாதாரியின் இந்த புகைப்படம் … Read more

டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க்.. மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட்.. வேட்பாளரின் நூதன கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: டாஸ்மாக்கில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க வேண்டும். மதுப்பிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நூதன கோரிக்கையுடன் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில செயலாளர் லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் அன்றைய Source Link

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக வி.சி.க தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல்.திருமாவளவன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு … Read more

ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக 5 பன்னீர்செல்வங்கள் – ராமநாதபுரம் தொகுதியில் ‘கட்டம்’ கட்டியது யார்?

தமிழ்நாட்டில் தேர்தல் களம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரத்தில் தலைவர்கள் அனைவரும் பிஸியாக இருக்கிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ தனக்கு எதிராக தன்னுடைய பெயரிலேயே போட்டியிட வேட்புமனு கொடுத்தவர்களைச் சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது ராமநாதபுரத்தில் என்ற விசாரணையில் இறங்கினோம். பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார் என்றதுமே அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதியாக அது மாறிவிட்டது. ஆனால், அங்கே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரை எதிர்த்து அவரது பெயரிலேயே ஐந்து பேர் வேட்புமனு … Read more

சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்க ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துள்ளது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். தனக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆணையம் அதை பரிசீலிக்கவில்லை. எனவே, தங்களுக்குப் பம்பரம் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது  இது குறித்து … Read more

மூச்சுமுட்டிய பொதுக்கூட்டம்.. தென்காசியில் எடப்பாடியின் பரப்புரையில் நெரிசலில் சிக்கி முதியவர் பலி

தென்காசி: தென்காசி அருகே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதியவர் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு Source Link

Renault Duster, Nissan SUV launch details – இந்தியா வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர், நிசான் எஸ்யூவி டீசர் வெளியானது

ரெனால்ட்-நிசான் இந்தியா கூட்டு நிறுவனத்தின் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இரு நிறுவனங்களின் சார்பாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதை உறுதிப்படுத்தி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரெனால்ட் டஸ்ட்டர் 5 இருக்கை எஸ்யூவி மற்றும் 7 இருக்கை எஸ்யூவி, நிசான் சார்பாக 5 இருக்கை மற்றும் 7 இருக்கை எஸ்யூவி என இரண்டும் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. Renault Duster, Nissan SUV CMF-B பிளாட்ஃபாரம் : … Read more

தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு

சென்னை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  நிறைவடைந்துள்ளது. நாடெங்கும்  நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் … Read more