பிரக்யா முதல் பிதுரி வரை: பாஜகவில் 33 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு ஏன்? – ஒரு பார்வை

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் முதல் பெயர் பட்டியலை பாஜக நேற்று முன்தினம் வெளியிட்டது. அவர்களில் போபால் எம்.பி. பிரக்யா தாக்குர், டெல்லி எம்.பி.க்கள் ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வர்மா உட்பட சிலர் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பல முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதன் காரணமாக அவர்களுக்கு இந்த முறை ‘சீட்’ வழங்கவில்லை. ‘மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தேசப் பற்றாளர்’ என்று பிரக்யா தாக்குர் பேசியிருந்தார். அதற்கு பிரதமர் … Read more

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகத் தயார்: பதில் அனுப்பிய அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மன்களை மீண்டும் மீண்டும் புறக்கணித்துவந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், வரும் மார்ச் 12 ஆம் தேதிக்குப் பின்னர் அமலாக்கத் துறை விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆஜராகத் தயார் எனத் தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு … Read more

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்குவது குற்றமே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்எல்ஏக்கள் தண்டனைக்குரியவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. 1998-ல் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் … Read more

லஞ்ச வழக்குகளில் எம்பி எம்எல்ஏக்கள் விலக்கு கூற முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து, எம்பி எம்எல்ஏக்களுக்கு விளக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள‌ ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும்ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் … Read more

மார்ச் 10-ல் நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் அமைப்பு தலைவர் அறிவிப்பு

புதுடெல்லி: விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம், அரசு திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு அதிக இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்,ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி பேரணியாக வந்தனர். அவர்கள் பஞ்சாப்எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இணைய சேவை தடை செய்யப்பட்டது. தடையை மீறி போராடிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. … Read more

வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும்: ரூ.2 ஆயிரம் வழங்கிய பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தன்னு டைய பங்களிப்பாக அவர் ரூ.2 ஆயிரம் வழங்கி உள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரம் கடந்த 2017-ல்நடைமுறைக்கு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 19(1)(a) பிரிவுக்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிராக இது இருப்பதாகக் கூறி தடை … Read more

1,000 பிரபலங்கள் பங்கேற்பு, 2,500 வகை உணவுகள் பரிமாறப்பட்டன: ரூ.1,250 கோடியில் அம்பானி இல்ல திருமண முன்வைபவம்

ஜாம்நகர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம் குஜராத்தின் ஜாம்நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் 1,000 பிரபலங்கள் பங்கேற்றனர். 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. ஒட்டு மொத்தமாக ரூ.1,250 கோடி செலவிடப்பட்டு உள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதிக்கு இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ், மகள் இஷாஇரட்டையர்கள் ஆவர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடைசி மகன் ஆனந்துக்கும் (28) ராதிகா மெர்ச்சென்டுக்கும் (29) … Read more

மேற்கு வங்கத்தின் அசான்சோல் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் பவன் சிங் விலகல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகர் பவன் சிங், சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. இதில், 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதில், மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் தொகுதியில் பிரபல போஜ்புரி பாடகர் பவன் சிங் (38) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, … Read more

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் முழுமையாக இணைந்தது: கரண் சிங் மகிழ்ச்சி

ஜம்மு: இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து, ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அந்த சூழ்நிலையில், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி, இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதனால், ஜம்மு காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் முயற்சி தடுக்கப்பட்டது. எனினும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க, 370-வது சட்டப்பிரிவின் கீழ் வழிவகை செய்யப்பட்டது. இது தற்காலிக ஏற்பாடுதான் என்று அப்போது … Read more