‘சட்டப்பேரவை தேர்தலில் 175 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்’ – ஜெகன்மோகன் பேச்சு

விஜயவாடா: எதிர்வரும் மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி பேசியுள்ளார். தனது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இதனை அவர் பேசியுள்ளார். “வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும். கடந்த தேர்தலில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். அதை சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் நல … Read more

“2035-ல் இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையம்” – பிரதமர் மோடி உறுதி

திருவனந்தபுரம்: “2035-ம் ஆண்டில் இந்தியாவுக்கென சொந்த விண்வெளி நிலையம் இருக்கும். மேலும், இந்த அமிர்த காலத்தில், ஒரு இந்திய விண்வெளி வீரர் இந்திய ராக்கெட்டில் நிலவில் இறங்குவார்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ரூ.1800 கோடி மதிப்பிலான மூன்று முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்களில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் … Read more

வயநாடு தொகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் ஆனி ராஜா போட்டி – ராகுல் காந்திக்கு..?

ராகுல் காந்தி எம்பியாக உள்ள வயநாடு தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்னும் கேள்வி எழுந்துள்ளது. வயநாட்டில் ராகுல் போட்டியில்லையா? – கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றிப் பெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் ராகுல் காந்தி போட்டியிட்டார். … Read more

டெல்லியில் 3 எம்எல்ஏக்களை களமிறக்கும் ஆம் ஆத்மி – ஹரியாணா மக்களவை வேட்பாளரும் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முடிவடைந்த சில நாட்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் செவ்வாய்க்கிழமை நடந்தது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரக் குழுவே ஆம் ஆத்மி கட்சியின் முடிவுகள் எடுக்கும் உச்சப்பட்ச அமைப்பாகும். அதன் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸுக்கு 3, பாஜகவுக்கு ஒரு சீட் – மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி: கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 3 வேட்பாளர்களும், பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மாநிலங்களில் இருந்து 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், 41 உறுப்பினர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்பட … Read more

‘தோழமை கட்சிகளின் வெற்றியை குறைப்பது இண்டியா கூட்டணி நோக்கம் அல்ல” – ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: “மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கவே ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது. மாறாக, தோழமைக் கட்சிகளின் வெற்றியைக் குறைக்க அது உருவாக்கப்பட்டவில்லை” என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், தனது கட்சி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று இடங்களை விட்டுத் தராது என்றும் மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களைத் தேர்தலுக்கான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து விட்டது. காங்கிரஸ் … Read more

வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிருந்தா காரத்

புதுடெல்லி: வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வயநாடு தொகுதிக்கான தனது வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா அத்தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர், ஒட்டுமொத்த இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக களம் காண இருக்கிறார். எனவே, ராகுல் காந்தியும், காங்கிரஸ் … Read more

ஸ்கெட்ச் போடும் பாஜக..! தேர்தலில் போட்டியிடும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்?

Lok Sabha Elections 2024: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

“மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி” – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக இருப்பவர்கள் நிர்மலா சீதாரானும், எஸ். ஜெய்சங்கரும். இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் போட்டியிட இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் … Read more

Farmers Protest: உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தை விவசாயிகள் எதிர்க்க காரணம் என்ன?

Farmers Protest: WTO ஒப்பந்தத்திலிருந்து விவசாயத்தை விலக்க வேண்டும் என்று கூறிய விவசாயிகள், இந்த ஒப்பந்தம் விவசாயிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கும் என்றும், இது விவசாயத்திற்கு ஆபத்தை அதிகரிக்கும் என்றும் கூறினர்.