காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

டெல்லி, குஜராத், ஹரியானா, சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்துள்ளன.  

மகாராஷ்டிராவில் 39-ல் உடன்பாடு: காங். அணியில் 9 தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி

மகாராஷ்ராவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இடையே 39 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து கட்சிகளும் இத்தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் மகராஷ்டிராவில் தொகுதி உடன்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலவைர் ராகுல் காந்தி அண்மையில் தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் … Read more

முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டம் ரத்து: அசாம் அரசு அதிரடி; அடுத்தது யுசிசி?

குவாஹாட்டி: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளி) பின்னிரவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். வரும் பிப்.28 ஆம் தேதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக … Read more

முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் ரத்து! அதிரடி நடவடிக்கை எடுத்த அசாம் அரசு!

Assam muslim marriage and divorce act:  முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935ஐ ரத்து செய்ய அஸ்ஸாம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பரிதவிக்கும் இந்திய இளைஞர்கள்: மத்திய அரசு உதவ வேண்டுகோள்

ஹைதராபாத்: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த போரால் இரு தரப்பிலும் வீரர்களின் உயிரிழப்பு மிக அதிகம். ரஷ்ய ராணுவத்தில் சேர உள்நாட்டினர் யாரும் முன்வரவில்லை. தங்கள் கைவசம் உள்ள ராணுவ வீரர்களை உக்ரைன் போரில் இழக்க ரஷ்யா ராணுவமும் தயார் இல்லை. இதனால் உக்ரைன் போரில் ஈடுபடுத்த வெளிநாடுகளில் வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களை ரஷ்யா ஈடுபடுத்தி வருவதாக தெரிகிறது. நேபாளத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ரஷ்யா சென்று உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். … Read more

பிப்ரவரி 29 வரை நிறுத்திவைக்கப்பட்டது விவசாயிகள் போராட்டம்

Farmers Protest: பிப்ரவரி 29ஆம் தேதி வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லி சலோ பேரணி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிப்ரவரி 29ஆம் தேதி எடுக்கப்படும் என்று நேற்று மாலை விவசாய தலைவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். 

மார்ச் 13-ம் தேதிக்கு பிறகு மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு?

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. வரும் மார்ச் 8 அல்லது 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு … Read more

நீர்மின் நிலைய திட்டத்தில் ரூ.2,200 கோடி ஊழல்: காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உட்பட 30 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: ஊழல் வழக்கு தொடர்பாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் வீடு உட்பட 30 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கிரு பகுதியில் ரூ.4,286 கோடி செலவில் நீர் மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இது வரும் 2025-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை சத்யபால் மாலிக் என்பவர் காஷ்மீர் ஆளுநராக பணியாற்றினார். கடந்த … Read more

பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு

சண்டிகர்: பஞ்சாப்-ஹரியாணா எல்லை நிலவரம் குறித்து விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை முடிவை அறிவிக்கின்றன. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வுகாணப்படாததால், ஷம்பு எல்லையில் இருந்து தடைகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல நேற்று முன்தினம் முயன்றனர். அவர்கள் மீது … Read more

கர்நாடகாவில் கோயில்களுக்கு 10% வரி: பாஜக எதிர்ப்பும், சித்தராமையா விளக்கமும்

பெங்களூரு: கர்நாடகாவில் கோயில்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் நடந்துவரும் ப‌ட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று, ‘கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (திருத்தம்) மசோதா’வை நிறைவேற்றியது. இந்த சட்டத்திருத்தத்துக்குப் பிறகு, கோயிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோயில்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் … Read more