“ஒய்.எஸ்.ஆர் வாரிசுதானா?” – ஜெகனை விளாசிய ஷர்மிளா

ஆந்திர மாநிலம் முழுவதும் காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதை முன்னிட்டு அக்கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா முன்தினம் இரவே விஜயவாடா சென்று, ஆந்திர ரத்னா பவனில் தங்கினார். நேற்று காலை ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உண்டவல்லியில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அமராவதி … Read more

Delhi Chalo: கருப்பு தினத்தை அனுசரிக்கும் விவசாயிகள்! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம் என எச்சரிக்கை!

Farmers Observe ’Black Firday’ On February 23, 2024 : டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது…

தெலங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் மரணம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, இன்று (பிப்.23) அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 37. சங்காரெட்டி மாவட்டத்தின் சுல்தான்பூர் ரிங் ரோடு பகுதியில் சாலைத் தடுப்பில் கார் மோதி விபத்து நடந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட எம்எல்ஏ அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதனையடுத்து அவரது … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 7-வது முறையாக கேஜ்ரிவாலுக்கு சம்மன்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்கு பதிவு … Read more

உலகளவில் அமுல் பிராண்ட் முதலிடம் பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி விருப்பம்

அகமதாபாத்: அமுல் பிராண்டை உலகளவில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார். குஜராத் மாநிலம் மோடேரா பகுதியில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஜிசிஎம்எம்எஃப்-ன் பொன்விழா கொண்டாட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசியதாவது: … Read more

“தியாகம்தான் இண்டியா கூட்டணியை உயர்த்தும்!” – தேஜஸ்வி யாதவ் நேர்காணல்

பாட்னா: “இந்த தேசத்தின் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் ஆபத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் நம்பினால், அவர்கள் சிறிய விஷயங்களைத் தியாகம் செய்து ஒன்றிணைந்து வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்” என்று பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதால் துணை முதல்வர் பதவியை இழந்து மீண்டும் எதிர்க்கட்சி வரிசைக்கு மாறியுள்ள தேஜஸ்வி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். … Read more

பிரதமர் மோடி மார்ச் 6-ல் மேற்கு வங்கம் பயணம்: சந்தேஷ்காலி செல்ல திட்டம்?

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் நகரில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார் என்றும், தொடர்ந்து சந்தேஷ்காலியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் … Read more

சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

மும்பை: சரத் பவார் தரப்பிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி சரத் பவார் தரப்புக்கு ‘Man Blowing Turha’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன் மூலம் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சரத் பவார் தரப்பிலான அணி ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி … Read more

“கமல்நாத் தேவையில்லை… கதவுகள் மூடல்” – சொல்கிறது ம.பி பாஜக

ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்): “பாஜகவுக்கு கமல்நாத் தேவையில்லை, அவருக்கான பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன” என்று மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலரான கைலாஷ் விஜய்வர்கியா, “எங்கள் கட்சிக்கு கமல்நாத் தேவையில்லை என்று நான் முன்பே சொல்லியிருந்தேன். அதனால்தான் அவருக்கான பாஜகவின் கதவுகள் மூடப்பட்டன” என்றார். தொடர்ந்து தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் … Read more

காங்கிரஸுக்கு டெல்லியில் 3, உ.பி.யில் 17 – ஆறுதலுடன் மீளும் இண்டியா கூட்டணி!

நிதிஷ் குமார் முழுமையாக விலகல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி முடிவு என பல மாநிலங்களில் இண்டியா கூட்டணி ஆட்டம் கண்டு வந்த நிலையில், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, இண்டியா கூட்டணிக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த மீட்சியின் பின்னணி என்ன? டெல்லி நிலவரம் என்ன? – சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, … Read more